சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல நினைக்கும் ஊழியர்கள் அனைவருமே முதல் சாய்ஸாக இருப்பது என்னவோ Skill டெஸ்ட் தான். ஆனால் அந்த Skill டெஸ்ட்டினை தற்போது மிகப்பெரிய பிரச்னை உருவாகி வருகிறது. இருந்தும் பலரும் நினைக்க மறந்த இந்த சேதி பத்தியும் தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் அட்மிஷன் பக்கம் போங்க. அதுவும் நீங்க படித்த பட்டதாரிகளா இருந்தா கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு உதவியா இருக்கும்.
சிங்கப்பூரில் வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு கோட்டா வெளியிடப்படும். அந்த கோட்டாவின் கணக்கினை வைத்தே வொர்க் பெர்மிட், SPass ஊழியர்களை பணியில் அமர்த்த முடியும். இதில் Basic Skill ஊழியர்களை பணியில் அமர்த்தும் போது அவர்கள் Skill டெஸ்ட் முடித்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் settle ஆக நினைக்கும் இளைஞர்களுக்கு… ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்
skill டெஸ்ட் என்பது அங்கீகரிக்கப்பட்ட இன்ஸ்டியூட்களில் சேர்ந்து 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுத்து மெயின் தேர்வு எழுதி அதில் பாஸாகி சிங்கப்பூரில் இருக்கும் கம்பெனிக்கு வேலை போட்டு வரலாம் என்பதே. இதில் ஏமாற்று வேலை என்பது குறைவு. மேலும், இன்ஸ்டியூட்டில் படிப்பதற்கு கம்பெனி போட்டு சிங்கப்பூர் வர என 4 லட்சம் கூட செலவுகள் இருக்கும். ஆனால் அடுத்தடுத்த முறை ரொம்பவே குறையும். சம்பள உயர்வும் கணிசமாக கிடைக்கும். சம்பளத்துடன் தங்குமிட வசதிகளும் செய்து கொடுப்பார்கள்.
இதையெல்லாம் யோசிக்கும் சிலர், மாஸ்டர் டிகிரி படித்து விட்டு கூட சிங்கப்பூர் வேலைக்கு Skill அடித்து வருகின்றனர். முதலில் Skill டெஸ்ட்டினை குறித்த அடிப்படை தகவலை தெரிந்து கொள்ளுங்கள். இந்த முறையில் சிங்கப்பூர் போகும் நீங்கள், எனக்கு எழுதப்படிக்க தெரியாது. அதனால் தொழிற்கல்வி படித்திருக்கேன் என்பதே. இது உண்மையாகவே படிப்பறிவு இல்லாமல் வாழ்க்கையை தேடும் ஒருவருக்கு செல்லும் வாய்ப்பு தானே.
அடுத்து, நீங்கள் மனம் வந்து Skill ஊழியராக போனால் கூட அங்கிருக்கும் foreman, supervisor கண்டிப்பாக உங்கள் கல்வி தகுதியை விட குறைவாகவே இருப்பார்கள். அது மேலும் உங்களுக்கு சங்கடத்தினை கொடுக்கலாம். இல்லை எனக்கு படிப்பலாம் கவலை இல்லை. சம்பாத்தியம் போதும் என நினைத்தால் தாராளமாக செய்யுங்கள். மீண்டும் சொல்வது தான். இது உண்மையாகவே படிக்காமல் சிங்கப்பூர் செல்ல நினைக்கும் ஒருவரின் வாய்ப்பாக தான் இருக்கும்.
அப்போது பட்டதாரி சிங்கப்பூர் வேலைக்கு செல்லக்கூடாதா? செல்லலாம். அதுக்கு உங்களுக்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு நல்ல ஏஜெண்ட்டினை வைத்து SPass அல்லது epass வேலைக்கு ஏற்பாடு செய்யுங்கள். சம்பளம் இந்திய மதிப்பில் லட்சத்தில் கிடைக்கும் என்றாலும் முதலில் ஏஜென்ட் கட்டணமே 5 லட்சத்தினை நெருங்கும். இதனால் இவ்வளவு செலவு எப்படி செய்வது என்ற கவலை இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு சிங்கப்பூர் வழி வைத்து இருக்கிறது.
சிங்கப்பூரில் இருக்கும் நிறைய வேலை வாய்ப்பு தளங்களில் வேலைகள் இருக்கும். அதனை பொறுமையாக தேடி வேலைக்கு அப்ளே செய்யுங்கள். இதற்கு சில ட்ரிக்ஸ்கள் இருக்கிறது. சரியான ரெசியூமினை ரெடி செய்யுங்கள். இதனால் ATSஐ தாண்டி உங்க ரெசியூம் ஹெச்.ஆரினை சென்றடையும். அதன்பின்னர், சரியாக நேர்காணலினை தெளிவாக முடித்தால் சில ஆயிரங்கள் செலவிலேயே உங்களால் சிங்கை வேலைக்கு வந்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.