Skill: சிங்கப்பூர் செல்ல அதிகமான ஊழியர்கள் பயன்படுத்தும் துறையாக தான் இருக்கிறது ஸ்கில் டெஸ்ட் இன்ஸ்டியூட்கள். இருக்கும் எந்த துறைகளிலாவது டெஸ்ட் முடித்து விட்டு ஸ்கில் ரிசல்ட் வந்தவுடன் சிங்கப்பூர் வேலைக்கு வரும் போது உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். அதுப்போல உங்களால் நிறைய வருடங்கள் இங்கு வேலை செய்ய முடியும். பல மாதங்களாக கிடப்பில் இருந்த ரிசல்ட்கள் அனைத்தும் கம்மி இடைவேளையில் வெளியிடப்பட்டு வருகிறது.
Skill டெஸ்ட் இன்ஸ்டியூட்களில் தேர்வு எழுதிய பலருக்கும் 100 நாட்களுக்கும் மேலாக ரிசல்ட் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. அந்த பிரச்னையை ஓய்ந்து வரும் நிலையில் தொடர்ந்து ரிசல்ட்கள் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நவம்பர் மாத ரிசல்ட் வந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதத்துக்கும் ரிசல்ட்டினை வெளியிட்டு இருக்கின்றனர்.
வந்து இரண்டு நாட்களை கடந்த நிலையில், வார இறுதி என்பதால் இன்று நாள் முடிவில் தான் எல்லா மையங்களிலும் ரிசல்ட் சொல்லப்படும் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த ரிசல்ட் பேப்பர் வந்தவுடனே அடுத்தக்கட்ட பணிகளில் சிங்கப்பூர் செல்ல இறங்க வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து ஏஜென்ட்டினை பார்த்து வேலையை வாங்கி இங்கு இறங்கினால் தான். அடுத்த பேட்ச் பணியாளர்களுக்கான கோட்டாக்கள் ரிலீஸ் செய்யப்படும். அதனால் ஒரு நல்ல ஏஜென்ட்டினை பிடித்து கம்பெனி போடும் வேலைகளை தொடங்குங்கள்.
தற்போது தொடர்ந்து ரிசல்ட் வெளியாகி வரும் நிலையில், Skill பிரச்னைகள் கிட்டதட்ட முடிவுக்கு வரும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஸ்டியூட்களும் அட்மிஷன் போட்டவர்களை பயிற்சிக்கு அழைத்து வருகிறது. விரைவில் மெயின் டெஸ்ட் நடைமுறையில் இருக்கும் சிக்கல்களும் குறையும்.
இதையும் படிங்க: வெளிநாடு வேலைக்கு பெயர் போன சிங்கப்பூர்… இந்திய ஊழியர்களை சரியாக அடைகாக்கிறதா? காவு கொடுக்கிறதா? ஆய்வு சொல்வது என்ன?
இதனால் skill அடிக்க நினைப்பவர்கள் தற்போதைய சூழலில் இன்ஸ்டியூட்களில் அட்மிஷன் போடலாம். அதிலும் பெரிய இன்ஸ்டியூட்களில் அட்மிஷன் போட்டு பயிற்சி எடுப்பதே சிறந்தது. ஏனெனில் BCA அப்ரூவல் கீழ் இயங்கும் இன்ஸ்டியூட்களுக்கே நேரடியாக கோட்டா ஒதுக்கீடு கிடைக்கும். அப்போ உங்களால் விரைவில் மெயின் தேர்வுக்கு செல்ல முடியும்.
நேரம் கடத்தாமல் அடுத்தக்கட்ட வேலைகளை பார்த்து சிங்கப்பூர் வேலைக்கு கிளம்புங்கள். அவசரத்தில் சில விஷயங்களை மறக்காதீர்கள். சரியான ஏஜென்ட், கம்பெனி போடுவதற்கு முன்னர் அந்த கம்பெனி குறித்த அடிப்படை தகவல்களை சரி பாருங்கள். IPA கிடைத்தவுடன் அதை முழுதும் படித்து விடுங்கள். உங்க எதிர்காலம் நல்லதாக மாற எங்கள் வாழ்த்துக்கள்.