TamilSaaga

குஜராத்தினை சிங்கப்பூர் போல மாற்ற ஆசை.. 70 நாட்கள்… 7000 கிமீ… இந்தியாவில் இருந்து சைக்கிளில் சிங்கப்பூர் வந்த ஜெர்ரி

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் செய்து வந்த ஜெர்ரி ஆஷிஷ் செளத்ரி சிங்கப்பூர் பயணத்தின் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள புடானியாவில் வசிக்கும் ஆஷிஷ் ஜெர்ரி சவுத்ரி (25) என்பவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆஷிஷ் தற்போது சிங்கப்பூர் universal studiosல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வொர்க் பாஸ் இருப்பவர்கள் என்ன கோர்ஸ் செய்யலாம்… இந்த சாப்ட்வேர் தெரியாமல் வராதீர்கள்.. பெத்த தொகையில் இருக்கும் சம்பளம்!

சுற்றுச்சூழலை பாதுகாத்து பிளாஸ்டிக் இல்லாத இந்தியா ஆகியவற்றின் கீழ் இந்த சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுவதாக ஜெர்ரி சவுத்ரி தெரிவித்தார். நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாசுபாடு மனித குலத்திற்கு எதிரி என்றார்.

குஜராத், ராஜஸ்தான், ம.பி., உ.பி., பீகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மியான்மரை வழியாக தாய்லாந்து, மலேசியா வந்து சிங்கப்பூரில் தனது பயணத்தினை முடித்து இருக்கிறார்.

சிங்கப்பூரின் முக்கிய இடங்களை சென்று அதுகுறித்த வீடியோ மற்றும் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

இதுவரை தனது சைக்கிளில் ஜெர்ரி நிறைய பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார். அதில், முதல் பயணம் 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியிலிருந்து ஜெய்சால்மருக்கு 18 நாட்களில் சென்றார். இரண்டாவது பயணம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்காயிரம் கி.மீ., தூரம் 36 நாட்களில் நிறைவு செய்தார். இப்போது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 7 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தினை முடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கலைக்கட்டிய தைப்பூசம்.. 35000 ஆயிரம் பக்தர்கள்… மனிதவளத்துறை அமைச்சர்… ஏகப்பட்ட ஸ்பெஷல் நிகழ்வுகள்

தனது சைக்கிள் பயணத்தின் போது, ​​பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை நடுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவர்களுக்கு சைக்கிள் பயன்பாட்டுக்கு அழைத்தார். இதனால் சுற்றுச்சூழலில் அதிகரித்து வரும் மாசுபாட்டை குறைக்க முடியும் எனத் தெரிவிக்கிறார்.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தின் புடானியா கிராமத்தில் வசிப்பவர், தனது தாத்தா சவான் ராம் சவுத்ரி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்று ஜெர்ரி சவுத்ரி கூறினார். இவரது தந்தை ராஜேந்திர சிங் சவுத்ரியும் ராணுவத்தில் உள்ளார். நாட்டு சேவையில் ஈடுபட்டவர்கள். சிறுவயதில் இருந்தே, நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது.

பள்ளிக்காலத்தில் அவரது ஆசிரியர் ஜெய் சிங் சவுத்ரி அவருக்கு ஒரு மரக்கன்று வழங்கினார். சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts