TamilSaaga
சம்பளம்

சிங்கையில் வேலைக்கு செல்லும் ஆசையில் இருக்கீங்களா? சம்பளம் எப்படி கொடுப்பாங்க.. என்னென்ன பிடித்தம் இருக்கும்.. தெரிஞ்சிக்கோங்க லைஃப் ஜிங்காலாலா தான்!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எப்படி கொடுப்பார்கள். என்னென்ன பிடித்தம் இருக்கும் என்ற அடிப்படை தகவல்கள் குறித்து பலருக்கு நீண்டகால சந்தேகங்கள் இருக்கும். இத தொடர்ந்து படிங்க. சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம் குறித்த முழு தகவல்கள் உங்களுக்காக.

சிங்கப்பூர் வேலைவாய்ப்புச் சட்டத்தின்படி, உங்கள் முதலாளி உங்கள் சம்பளத்தை ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது மற்றும் வேலை பார்த்த நேரத்தின் சம்பள காலம் முடிந்த 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதை விட சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது நல்லதா? என்ன வித்தியாசம் இருக்கும்… தெரிஞ்சிக்கோங்க டெஸ்ட் ஈசியாகிடும்

வேலை செய்வதற்காக கொடுக்கப்படும் சம்பளத்தில் தங்குமிடம், பயன்பாடுகள் அல்லது பிற வசதிகளின் பிடித்தம், ஓய்வூதியம் அல்லது முதலாளியால் செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு, டிராவல் allowance, வேலையின் போது ஏற்படும் செலவுகளுக்கான தொகை, பணிநீக்கம் அல்லது ஓய்வு பெறும்போது செலுத்த வேண்டிய தொகை ஆகியவை அடங்காது.

சிங்கப்பூரில் ஒரு வேலைக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது இல்லை. உங்கள் சம்பளத்தினை கம்பெனி நிர்வாகம் அதன் நிலைகேற்ப முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்படும்.

நீங்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் இருந்தால், கம்பெனி நிர்வாகம் உங்க சம்பளத்தை மாதம் ஒரு முறையாவது செலுத்த வேண்டும். வாரம் ஒருமுறை செலுத்த அவர்கள் விரும்பினாலும் கொடுக்கலாம். சம்பள காலம் முடிந்த 7 நாட்களுக்குள் சம்பளம் கொடுத்திருக்க வேண்டும். கூடுதல் நேர வேலைக்கு, சம்பள காலம் முடிந்த 14 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: உஷாரய்யா உஷாரு.. சிங்கப்பூர் மக்களைக் குறிவைக்கும் 5 வேலைவாய்ப்பு மோசடி – எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ராஜினாமா செய்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தினை கடைசி வேலை நாளில் கொடுக்க வேண்டும். முன்னறிவிப்பு இல்லாமல் வேலையை விடும் ஊழியர்களுக்கு அவர்கள் வேலை பார்த்த கடைசி 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். இதேபோல, வேலையை விட்டு நீக்கப்படும் ஊழியர்களுக்கு கடைசி நாளில் கொடுக்க வேண்டும். அல்லது அடுத்த 3 நாட்களுக்குள் மொத்த சம்பள மிச்சத்தினை கொடுத்து விட வேண்டும்.

வேலை நாளில் தான் சம்பளத்தினை அக்கவுண்ட்டிலோ அல்லது வங்கி செக்காகவோ கொடுக்க வேண்டும். ஏப்ரல் 1, 2016 முதல், அனைத்து முதலாளிகளும் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு Payslips வழங்க வேண்டும்.

சம்பளம் குறித்த நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்படாத பட்சத்தில் கம்பெனி நிர்வாகத்திடம் இதுகுறித்து காரணத்தினை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அந்த காரணம் உங்களுக்கு சரியானதாக இல்லாத பட்சத்தில், https://www.tal.sg/tadm/eservices இந்த லிங்கில் சென்று சம்பளம் வராதது குறித்து புகார் அளிக்கலாம்.

வேலைக்கு விடுப்பு எடுக்கும் போது சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். மேலும், சில காரணங்களுக்காகவும் பிடித்தம் இருக்கும்.

கம்பெனிக்கு ஏற்படும் சேதம்:

கம்பெனி உங்கள் பொறுப்பில் கொடுக்கப்படும் பொருட்கள் அல்லது பணத்தை சேதப்படுத்தினால் அல்லது இழந்தால் உங்கள் சம்பளம் கழிக்கப்படும். உங்கள் 1 மாத சம்பளத்தில் 25%க்கு மேல் கழிக்க முடியாது. இந்த பிடித்தமும் ஒரு முறை தான் இருக்க வேண்டும்.

கம்பெனி தரும் வசதிகள்:

கம்பெனி உங்களுக்கு கொடுக்கும் சில வசதிகளுக்கு பிடித்தம் இருக்கும் என முன்கூட்டியே அறிவித்திருந்தால் அந்த பிடித்தம் இருக்கும். கம்பெனியிடம் நீங்க சம்பளத்தில் அட்வான்ஸ் அல்லது லோன் வாங்கி இருந்தாலோ அந்த தொகையை மீண்டும் வாங்கும் போது பிடித்தம் இருக்கும். ஒவ்வொரு தவணையும் உங்கள் சம்பளத்தில் 25%ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. CPF இருந்தால் அந்த பிடித்தமும் இருக்கும்.

மேலும், உங்க சம்பளத்தில் மாற்றம் செய்யும் போது ஊழியரிடம் கண்டிப்பாக கம்பெனி நிர்வாகம் எழுத்து வடிவத்தில் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் MOMமிடம் wP ஆன்லைன் மூலம் சம்பள மாற்றம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். SPass அல்லது EPass ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யும் போது EP ஆன்லைன் மூலம் MOMமிடம் கோரிக்கை வைக்கப்பட வேண்டும். வொர்க் பாஸ் புதுப்பித்தல், security bond, கட்டாய பயிற்சிகள், levy ஆகியவற்றுக்கு கண்டிப்பாக கம்பெனி நிர்வாகம் ஊழியரிடம் இருந்தும் எந்த பிடித்தமும் செய்ய கூடாது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts