சிங்கப்பூரில் பலவகையான பாஸுக்கள் வேலைக்காக இருக்கிறது. இதில் முக்கியமான பாஸ்கள் குறித்து பார்த்து கொண்டு வருகிறோம். அதில் இன்று பார்க்க இருக்கும் பாஸ் பலருக்கு பெரிய அறிமுகம் கூட இல்லாமல் இருந்திருக்கும் அதையும் சிங்கப்பூர் வருவதற்குள் தெரிந்து கொள்ளுங்கள்.
Skilled test அடித்து சிங்கப்பூர் வருவது அதிகரித்து இருக்கிறது. இதில் கோட்டா பிரச்னை கூட தற்போது நிலவி வருகிறது. இதை போல s-pass, e-pass, student visa, pcm permit இவை குறித்து அறிந்த பலரும் TEP என்ற பாஸ் குறித்து தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில் இருந்து பாஸ்களுக்கான அடிப்படை சம்பளம் உயர்ந்துள்ள நிலையில், TEP பாஸ்களில் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆள் எடுப்பதும் அதிகரித்து இருக்கிறது.
இதனால் இந்த பாஸ் குறித்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள இருக்கிறோம். TEP என்பது Training Employement Pass. இந்த பாஸினை அப்ளே செய்ய நீங்கள் ஏஜென்ட்டை தான் நாட வேண்டும். எப்போதும் சொல்வது போல உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஏஜென்ட்டை தேர்ந்தெடுங்கள். TEPல் வருபவர்கள் சிங்கப்பூரில் 3 மாதம் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பாஸில் சிங்கப்பூர் வருபதற்கு உங்களின் கல்வி தகுதி டிப்ளமோ அல்லது டிகிரியாக இருக்க வேண்டும். இந்த பாஸில் நீங்கள் அப்ளே செய்தால் அதிகபட்சம் 10 நாட்களில் சிங்கப்பூருக்கு வந்து விடலாம். குவாரண்டைன் இதற்கு கிடையாது. நேரடியாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கினால் உங்கள் கம்பெனிக்கு சென்று விடலாம். இதற்கு கட்டணமாக $6000 சிங்கப்பூர் டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசையா… டிகிரி படிச்சிருந்தாலே போதும் S-Pass இருக்கு… S Pass வாங்க இதை Follow பண்ணுங்க..
இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3 லட்சத்தி 70 ஆயிரமாக கணக்கிடப்படுகிறது. இந்த பாஸில் வருபவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்சமாக $20 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக கொடுக்கப்படும். ஓவர் டைமும் இருக்கும். 3 மாதம் மட்டுமே என்பதால் MOM அலுவலகத்தில் பெரிய அளவில் வேலைகள் எல்லாம் இருக்காது. 3 மாதத்திற்கு temporary அடையாக அட்டை மட்டும் கொடுக்கப்படும். இதில் சிலருக்கு சந்தேகம் இருக்கும் 3 மாதத்திற்கு 3 லட்சமா எனக் கூட யோசிக்க தோணும். 3 மாதம் முடிவதற்குள் நீங்கள் சிங்கப்பூரிலேயே டெஸ்ட் அடிக்கவும் சேர்த்து தான் இந்த தொகை உங்களிடம் வாங்கப்படுகிறது.
நீங்கள் சிங்கப்பூரிலேயே டெஸ்ட் அடித்து பாஸ் செய்து விட்டால் உங்களுக்கு construction வேலை மாற்றி கொடுத்து விடுவார்கள். உங்களுக்கு தகுதி இருந்தால் எல்லா துறைகளிலும் வேலைக்கு எடுத்து கொள்வார்கள். construction, manufacturer என எங்கு வேண்டும் என்றாலும் உங்களுக்கு வேலை மாற்றி கொடுக்கப்படும். TEPல் இருந்து உங்களின் வேலைக்கான பாஸ் வொர்க் பெர்மிட்டாக மாற்றி விடுவார்கள். அதன்பிறகு MOM அலுவலகம் சென்று கை ரேகை வைத்து உங்களின் நிரந்தர அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம். இது நீங்கள் சொந்த நாட்டில் இருந்து டெஸ்ட் அடித்து விட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைபடுமோ அதுவே கேட்கப்படும். அந்த வேலைகளை எல்லாம் கம்பெனியே பார்த்து கொள்வார்கள்.
இப்போதைய சூழலில் இந்த பாஸில் சிங்கப்பூர் வருபவர்களும் அதிகரித்துள்ளனர். இந்த பாஸில் நீங்க சிங்கப்பூர் வந்து இங்குள்ள சூழலை அறிந்து கொண்டு நன்கு வேலைகளில் பரிச்சயமாகி விட்டால் டெஸ்ட் அடிப்பதும் ஈசியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.