TamilSaaga

தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்த… பொது போக்குவரத்தில் கில்லி… சிங்கப்பூர் சொல்லும் சீக்ரெட்… ரயில் நிலையங்களில் ’நோ’ குப்பை தொட்டி…

சிங்கப்பூரின் பொது போக்குவரத்து ஹாங்காங், சூரிச் மற்றும் ஸ்டாக்ஹோமுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கலிபோர்னியாவில் உள்ள பல்கலைகழகம் பொது போக்குவரத்து குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டனர். பொதுப் போக்குவரத்திற்கான தூரம், டிக்கெட்டின் விலை, அதிக அளவிலான போக்குவரத்து சேவைகள், பயணியர் கூட்டம் மற்றும் பயண வேகம் ஆகியவற்றை கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிங்கப்பூர் நான்காவது இடத்தினை பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக சிங்கப்பூர் அதன் பொது போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்துவதால் பல நாடுகளுக்கும் முன்னோடியாக தான் இருக்கிறது. 2020ம் ஆண்டில் கூட U.S. travel site, Far & Wide சிங்கப்பூர் உலகத்தின் சிறந்த பொது போக்குவரத்தினை கொண்ட நாடாக அங்கீகரித்தது. $10 சிங்கப்பூர் டாலருக்கு Singapore Tourist Pass வாங்கி விட்டால் அன்றைய நாளில் எத்தனை முறை வேண்டும் என்றாலும் ரயில் மற்றும் பஸ்ஸில் மூன்று நாட்களை வரை பயணம் செய்து கொள்ளலாம்.

இங்குள்ள டாக்ஸியின் கட்டணங்கள் நீங்கள் எப்போது, ​​எங்கு, எந்த நிறுவனத்தின் டாக்ஸியில் ஏறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து கட்டணங்கள் நிர்ணியிக்கப்படும். 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு சிங்கப்பூர் MRT நிலையங்களுக்குள் இருந்த அனைத்து குப்பைத் தொட்டிகளும் அகற்றப்பட்டன.

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து சிறப்பாக இருப்பதற்கு அதன் மின்னணு வசதிக்கொண்ட பேருந்துகளும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. மேலும், மிகவும் மலிவு விலையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடிவதாலே உலக நாடுகள் சிங்கப்பூரை பாராட்டி வருகின்றனர்.

சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கு பொதுப் போக்குவரத்தினை சுலபமான தூரத்தில் பயன்படுத்தும் வகையில் அமைக்க அரசாங்கம் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான பல பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் 10ல் 8 குடும்பத்தால் 10 நிமிட நடைப்பயணத்தில் ஒரு ரயில் நிலையத்தினை அடைய முடியும் எனக் கூறப்படுகிறது.

பஸ் போக்குவரத்திலும் சில திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்து முயற்சி நடைபெற்று வருகிறது. வேகமான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts