லஞ்சம் என்றாலே சிலருக்கு காதில் புகை பறக்கும் அளவு சோதனையை சந்தித்து இருப்பர். அதை அவர்கள் கூறும்போது கேட்டால், நமக்கு சாதரணமாகவே தோணும். ஆனால் அதில் அவர்கள் பட்ட இன்னலில் நொந்து சிலர் தவறான முடிவுக்கு சென்ற கதை கூட அனேகம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒருவர் தனது சோக கதையை டிவி நிகழ்ச்சியில் கூற எனக்கு இந்தியாவே வேணாம். நான் குடும்பத்துடன் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆக விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் வேந்தர் தொலைக்காட்சியில் இது உங்க மேடை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பட்டிமன்ற போன்ற இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவர் பேசிய வீடியோ தான் தற்போதைய வைரல் வீடியோவாகி இருக்கிறது. அதில், நான் சிங்கப்பூரில் ஏழு வருடமாக வேலை செய்து வந்தேன். சில நாட்கள் முன்னர் தான் தமிழகத்திற்கு வந்தேன். பேங்கில் பணம் எடுக்கலாம் என சென்றேன். ஆனால் வங்கி மேனேஜர் உங்களால் பணம் தற்போது எடுக்க முடியாது. ஆதார் கார்ட்டினை கொண்டு வாங்க எனக் கேட்டார். நான் டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அட்டை மற்றும் பேங்க் பாஸ்புக் கொடுத்திருக்கேனே ஏன் எடுக்க முடியாது எனக் கேட்டேன். அவர் இது இப்போ எதுவும் தேவையில்லை. ஆதார் கார்டு தான் வேணும். போங்க எடுத்துட்டு வாங்க எனக் கூறி அனுப்பி விட்டார்.
நானும் கையோட 20, 30 நாளா அலைஞ்சி சில ஆயிரங்களை செலவு செய்து அதை கொண்டு போய் கொடுத்தேன். இதனால் எனக்கு வேறெந்த பயனும் பெரிதாக இல்லை. ஒரு சில நிமிடங்களில் சிம் கிடைத்து விடுகிறது அவ்வளவு தான். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதை விட கொடுமை ஒன்று நடந்தது. என் மனைவியுடன் சென்னைக்கு சுற்றிப்பார்க்க அதிராம்பட்டினமில் இருந்து காரினை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சென்றோம். 352 கிலோமீட்டர் பயணத்தினை தொடங்கும் போதே ட்ரைவர் கையில் அதிகமாக ஒரு 2000 ஆயிரத்தினை வைத்துக்கொள்ள சொன்னார். நான் ஒரு குழப்பத்துடனே பயணத்தினை தொடங்கினேன். 20கிலோ மீட்டருக்கு ஒருமுறை போலீஸ் வண்டியை நிறுத்தி 200, 300 லஞ்சமாக வாங்கினார்கள். இது எனக்கு மிகப்பெரிய கோபத்தை கிளப்பியது.
நான் 7 வருடமாக சிங்கப்பூரில் பணியாற்றி இருக்கேன். ஒரு ரூபாய் ஒருத்தருக்கும் லஞ்சமே கொடுத்தது இல்லை. 320 கிலோமீட்டருக்கு 2000 லஞ்சம் கொடுக்க வேண்டிய என் நாட்டால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனாலே, எனக்கு என் மனைவி, பிள்ளை மற்றும் பெற்றோருடன் சிங்கப்பூரிலே செட்டில் ஆகி விட தோன்றுகிறது எனக் கூறி இருக்கிறார்.