சினிமாவில் மட்டுமல்ல சிலரின் வாழ்க்கை கூட அதிசயம் நிறைந்ததாகவே இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாகவும் ஒரு மனிதர் வாழ்ந்த சம்பவம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.
பாரீஸ் விமான நிலைய முனையத்தில் லக்கேஜுடன் ஒரு மனிதர் எப்போதுமே அமர்ந்து இருந்த காட்சியை அங்கு சென்ற பலரும் பார்த்திருக்க கூடும். இவர் அங்கு இருந்தது ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்தார். இவர் ஒரு ஈரானிய அகதி. மெஹ்ரான் கரிமி நாசேரி என அழைக்கப்படும் இவர் இங்கிலாந்தில் வாழ முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.
அவருக்கு பல நாடுகள் குடியுரிமை கொடுத்தும் அவர் அந்த விமான நிலையத்தினை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். ஒரு இடத்தில் அமர்ந்து தொடர்ச்சியாக புத்தகம் படித்து எதுவும் எழுதிக்கொண்டிருப்பாராம். அவருக்கு உணவினை ஏர்போர்ட் அதிகாரிகளே கொடுத்து விடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இவரின் வாழ்க்கையை கண்டு வியந்த ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பில்பெர்க் டெர்மினல் என்ற பெயரில் படத்தினையும் எடுத்தார். 1988 முதல் 2006 வரை தொடர்ச்சியாக விமான நிலையத்தில் இருந்தவர் செப்டம்பர் பாதியில் மீண்டும் விமான நிலையத்தில் தங்க விரும்பி மீண்டும் அங்கையே வாழ துவங்கினார். இதை தொடர்ந்து நேற்று நண்பகல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை எடுத்து உயிரிழந்தார். அவருக்கு அவசர சிகிச்சைகள் கொடுத்தும் எதுவும் பலனிளிக்கவில்லை எனக் கூறப்பட்டது.
70களில் கடைசியில் இருக்கும் இவரின் சரியான வயது அறியப்படவில்லை. தன்னை பலரிடம் இரானியன் என சொல்லிக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.