சிங்கப்பூரில் பணியிடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாத 66 நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.
இணைய வழியில் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட Feedback தரவுகளை கொண்டு இந்த நடவடிக்கையை மனிதவள அமைச்சகம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பணியிட பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து சுமார் 3500 பேரிடம் பின்னூட்டம் பெற்றதாகவும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த மே 16ம் தேதி இரண்டாம் கட்ட உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட நேரத்தில் இருந்தே பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்ய அறிவுறுத்தி வருகின்றது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் தற்போது சிங்கப்பூரில் தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மேலும் சில காலத்திற்கு இந்த வீட்டில் இருந்து பணிசெய்யும் நடைமுறை அமலில் இருக்கும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.