நிலவிவரும் கொரோனா தொற்றுக்கு எதிராக நாடுகளின் போராட்ட எழுச்சியில் இந்தோனீசியாவுக்கு உதவும் வகையில் அவசரமாக வழங்கப்படும் ஆக்ஸிஜன் தொடர்ந்து வழங்கிடப்படும் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் ஷட்டில் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலமாக இந்தோனீசியாவின் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய இயலும் எனவும் MFA தெரிவித்துள்ளது.
தற்போது முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 500 டன்னுக்கு அதிகமான ஆக்ஸிஜனை வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.
80 டன் கொண்ட திரவ ஆக்ஸிஜன் தாங்கிய டாங்கிகள் ஜகார்த்தாவில் உள்ள தஞ்சங் ப்ரியோக் துறைமுகத்துக்கு வந்துள்ளதாகவும் சுமார் 10,000 சிலிண்டர்களில் இதனை நிரப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவிற்கு 500 டன்னுக்கு அதிகமான ஆக்ஸிஜன் வழங்க இலக்கு உள்ளதாக மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹீன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Photo Credit : Smart Gas