TamilSaaga

சிங்கப்பூரில் திறமையான ஊழியர்கள் பற்றாக்குறை.. பணி விசா காலத்தை நீட்டிக்கும் முக்கிய அறிவிப்பு – ஜனவரி 1 முதல் புதிய விசா!

சிங்கப்பூரில் திறமையான ஊழியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதால், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நீண்ட கால பணி விசா வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூரின் Ministry Of Manpower கூறுகையில், “வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 1 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise Pass – ONE) விசா நடைமுறைக்கு வருகிறது. இந்த விசா விதிகளின் கீழ், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.17.17 லட்சம்) சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு பணிக்கான விசா வழங்கப்படும். அதுமட்டுமின்றி அதை ஊழியர்களை சார்ந்தவர்கள் சிங்கையில் வேலை தேடவும் அனுமதிக்கப்படும்.

மேலும் படிக்க – குற்றவாளிகளை அலற விடும் சிங்கப்பூரின் கிரிமினல் லாயர் ‘துரை சிங்கத்துக்கு’ 4000 டாலர் அபராதம் – சிங்கையின் ‘gag order’-ஐ மீறினால்… யாராக இருந்தாலும் தண்டனை!

இதுகுறித்து, Manpower Minister அமைச்சர் டான் சீ லெங் கூறுகையில், “முதலீட்டாளர்கள் நன்றாக முதலீடு செய்யவும் திறமையாளர்கள் வேலை பார்க்கவும் பாதுகாப்பான மற்றும் ஸ்திரமான இடமாக சிங்கப்பூர் விளங்குகிறது. எனவே திறமைசாலிகளுக்கு புகலிடமாக விளங்கும் சிங்கப்பூரின் இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, திறமையான ஒயிட் – காலர் பணியாளர்களை கண்டறிவதில் சிங்கை தடுமாறி வருகிறது. இந்நிலையில் திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவும் சர்வதேச வர்த்தகத்தை ஈர்க்கவும், சிங்கப்பூர் அரசின் மிக முக்கிய நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts