TamilSaaga

சிங்கப்பூர் போயிட்டு வரேன்-னு சொல்லி.. உடல்களாக திரும்பிய இரு ஊழியர்கள் – திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய உடல்கள் – குடும்பத்தினரின் கண்ணீருக்கு பதில் இல்லை!

சிங்கப்பூரில் உயிரிழந்த திருச்சி பெரியசாமி, வீரையா ஆகியோரது உடல்கள் இன்று காலை (ஜூன்.26) திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

சிங்கப்பூரில் கடந்த ஜூன் 22ம் தேதி, காலை 10.15 மணியளவில், காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில் பணியிடத்தில் நிகழ்ந்த கிரேன் விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பெரியசாமி ராஜேந்திரன் எனும் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இறந்த பெரியசாமி ராஜேந்திரன் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், வரம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவரது வயது வெறும் 32 மட்டுமே.

அதேபோல், கடந்த ஜூன்.23ம் தேதி மதியம் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கிய வீரையா எனும் ஊழியர் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. கடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வீரையா வேலைப்பார்த்து வந்தார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் 84 வயது முதியவரும், 14 வயது பேத்தியும் ஒரே நாளில் மரணம்.. வெவ்வேறு இடங்களில் கிடந்த சடலம் – 5 நிமிட கேப்பில் சிங்கை போலீசாரை திணற வைத்த சம்பவம்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் தூண்டி. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தார். இவரது மகன் தான் வீரையா (வயது 48).

எல்லாவற்றுக்கும் மேலாக இவர் படித்தது வெறும் ஒன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இவர் வகித்ததோ கப்பல் கட்டுமானத் துறையில் ‘Painting Inspector’ பொறுப்பில். இந்த பணியில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பெரும் படிப்பு படித்தவர்களே. ஆனால், ஒன்றாம் வகுப்பு மட்டும் படித்து ‘Painting Inspector’-ஆக பணியில் இருந்தது வீரையா மட்டுமே.

இந்நிலையில் உயிரிழந்த பெரியசாமி ராஜேந்திரன் மற்றும் தூண்டி வீரையா ஆகியோரது பூத உடல் இன்று (ஜூன்.26) திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து நமது தமிழ் சாகா-வுக்கு அனுப்பப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இவை. உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் மல்க இருவரின் உடல்களையும் கையெழுத்துப் போட்டு பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து ஆம்புலன்சில் அவரவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts