TamilSaaga

சிங்கப்பூரில் முதன் முறையாக.. 11 வயது சிறுமிக்கு வந்த கொடுமை – கடவுளை வேண்டிக் கொண்டு மருத்துவர்களிடம் மகளை ஒப்படைத்த பெற்றோர்!

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Kristal Yong. வயது 11. இவருக்கு 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வலது கண்ணில் உள்ள தசையில் அரிதான புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த சிறுமிக்கு இதுவரை சிங்கப்பூரில் கண்களில் யாருக்கும் செய்திராத கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இன்டர்ஸ்டீடியல் ப்ராச்சிதெரபி (interstitial brachytherapy) என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சையானது, கதிரியக்கப் பொருளை நேரடியாக கட்டிக்குள் அல்லது அதற்கு மிக அருகில் வடிகுழாய் அல்லது அதுபோன்ற சாதனம் மூலம் வழங்க அனுமதிக்கிறது. சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்கள் வழக்கமான வெளிப்புற கற்றை கதிர்வீச்சைக் காட்டிலும் கதிர்வீச்சினால் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன. இது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் கதிர்வீச்சை வழங்கும்.

மேலும் படிக்க – ஒரு நொடியில் பறிபோன உயிர்.. 20 மீ இழுத்துச் செல்லப்பட்ட பெண்.. குற்ற உணர்ச்சியில் நடு ரோட்டில் தலையில் அடித்துக் கொண்டு அழுத சிங்கப்பூர் Cab டிரைவர்

இருப்பினும், சிங்கப்பூரில், இதற்கு முன்பு யாருக்கும் கண்ணில் brachytherapy சிகிச்சை செய்யப்படவில்லை, அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக சிங்கப்பூரில் brachytherapy செய்யும் இரண்டாவது குழந்தையாக Kristal Yong இருப்பார்.

சிறுமி கிறிஸ்டல் கடந்த ஆண்டு ஏப்ரலில் கீமோதெரபி உட்பட ஆறு மாத புற்றுநோய் சிகிச்சையை மேற்கொண்டார். சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் orbital rhabdomyosarcoma எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் குழந்தை நோயாளி தான்.

மிக விரைவில் கிறிஸ்டலுக்கு interstitial brachytherapy எனும் இந்த சிகிச்சை தொடங்க உள்ளது. எல்லா தடைகளையும் மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts