சிங்கப்பூரில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது இடங்களில் தொந்தரவு விளைவித்தல், திருட்டு மற்றும் போதை பொருள் தொடர்பான குற்றங்களில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் நேற்று (ஜீலை.16) துணை மருத்துவர்களிடமும், ஜலான் பெசார் பகுதியில் உள்ள ஒரு காப்பி கடையிலும் சட்ட விரோதமாக பொது இடங்களில் தொல்லை தரும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட இடத்துக்கு காவல்துறை வந்தபோது அந்த நபர் மற்றவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டிருந்தார்.
அதிகாரிகள் பலமுறை அறிவித்தும் அடங்க மறுத்த அந்த நபர் காவலர்களுக்கு சவால் விடும் வகையில் பேசி செயல்பட்டுள்ளார் என போலீஸார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பின்பு அந்த நபரை அடிபணிய வைக்கும் நடவடிக்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் இறங்கிய பின்பு வழிக்கு வந்துள்ளார் அந்த 41 வயது நபர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் அந்த நபர் நடந்துகொண்ட விதங்களை காணமுடிகிறது.