‘சம்போ சிவ சம்போ’ என்று ஷங்கர் மகாதேவன் ஹை பிட்சில் பாடுவதற்கு அடித்தளமிட்டதே ‘நட்பு’ எனும் உறவு தான். நண்பர் சமுத்திரக்கனி ‘நாடோடிகள்’ எடுப்பதற்கான விழுது அவர் நேரில் பார்த்த பல ரியல் லைஃப் சம்பவங்களால் தான்.
நட்பு இங்கு அவ்வளவு வலிமையானது. மற்ற உறவுகள் கொடுக்கும்.. அதே சமயம் கெடுக்கும். இந்த நட்பு என்பது கொடுக்கும் அல்லது பிரியும். கெடுக்காது.
சரி… இனியும் சோதிக்காம விஷயத்துக்கு வந்துடலாம். சிங்கப்பூரில் பணிபுரியும் G.பிரான்சிஸ் சேவியர் என்பவருக்கு இன்று (ஜூன்.10) திருமணம் நடைபெறுகிறது. இதற்காக சிங்கையில் அவரது அறையில் தங்கியிருக்கும் சக நண்பர்கள் அவருக்கு சர்பிரைஸ் தர முடிவு செய்து நமது ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ செய்தித் தளத்தை அணுகினர்.
பிறகு, புது மாப்பிள்ளையை வாழ்த்தி கார்டு ஒன்று வெளியிட முடிவு செய்யப்பட்டது. ராஜ்குமார், ஸ்டீஃபன், பாண்டி, கார்த்திக், சரவணன், சூசை மற்றும் அஷோக் ஆகிய அவரது நண்பர்கள் இணைந்து தமிழ் சாகா மூலம் வாழ்த்து செய்தி வெளியிட்டு மாப்பிள்ளை பிரான்சிஸ் சேவியருக்கு சர்பிரைஸ் கொடுத்தனர்.
துன்பம் வரும் நேரத்தில் கைக்கொடுப்பதும், இன்பம் வரும் நேரத்தில் கொண்டாடுவதும் தானே நட்பு! இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் புது மாப்பிள்ளை சார்!