TamilSaaga

துறுதுறு குணம்.. அழகான முகம்.. மலேசியாவில் இந்திய இளம் பெண் “பவித்திரா” எரித்துக் கொலை – ஒன்று திரளும் தமிழர்கள்

மலேசியாவில் பவித்திரா எனும் இளம்பெண் சமீபத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து #justiceforpavithira எனும் ஹேஷ்டேக் தற்போது மலேசியாவில் டிரெண்டாகி வருகிறது.

பவித்திரா இந்தியாவைச் சேர்ந்தவர் என்று அங்கு வசிக்கும் தமிழர்கள் பலரும் அவரது புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இது குறித்து போலீஸ் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று தெரிகிறது.

பவித்திரா சமூக தளங்களில் தனது வீடியோக்களை பதிவிட்டு ஓரளவு பிரபலமாக இருந்த நிலையில், தற்போது எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க – சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. ஏஜென்ட் உண்மையில் உங்கள் வேலைக்கு விண்ணப்பித்துள்ளாரா? Passport எண் மட்டுமே வைத்து கண்டறிவது எப்படி?

இதுகுறித்து மலேசியாவில் வசிக்கும் ஃபிரடரிக் ஜெகதீசன் என்பவர் தனது முகநூலில் பவித்திரா புகைப்படத்தை பதிவிட்டு, “கற்பழித்து கொலை செய்வது என்பது மலேசியாவுக்கு வெளியில் நடக்கும் ஒன்றாகும். இவர் கற்பழிக்கப்படவில்லை. ஆனால், எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். மலேசியாவில் இப்படி இதுவரை நடந்ததில்லை. மலேசிய போலீசார் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள் என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது ஆண் நண்பரை மலேசிய காவல்துறை விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றபடி பவித்திரா குடும்பம் பற்றியோ, அவர் எதனால் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றியோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts