சிங்கப்பூரில் திருமணமாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தனக்கும் தனது மனைவிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷயத்தில் உதவிய சமூக சேவை மையத்தின் தலைவருடன் தனது மனைவிக்கு தொடர்பு இருப்பதாக ஒருவர் சந்தேகித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2019ல் ஒரு அதிகாலை பொழுதில், Fong Tuck Whye என்ற அந்த ஆண் தனது மனைவியை சுமார் 4 கத்திகளை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் பிறப்புறுப்பிலும் கத்தியால் குத்தியுள்ளார்.
இப்போது 67 வயதாகும் ஃபோங், இன்று வெள்ளிக்கிழமை (மே 6) கொலை முயற்சி குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கும் தற்போது 63 வயதான பாதிக்கப்பட்ட பெண்மணிக்கும் கடந்த ஆண்டு விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி போலியோவால் பாதிக்கப்பட்டவர் என்பது நினைவுகூரத்தக்கது, பெரும்பாலும் சக்கர நாற்காலியில் தனது பொழுதை கழிப்பதால் கடந்த 2006ம் ஆண்டு முதல் அவரால் எந்தவிதமான வேலையும் செய்ய முடியவில்லை.
கடந்த 2014 முதல் 2015 வரை, ஃபாங் டிரைவராக வேலை செய்வதை நிறுத்திவிட்டு, அவர் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் “பாதுகாவலராக” மாறியுள்ளார். மேலும் அந்த பெண் தனது குடியிருப்பை விட்டு வெளியேறவோ அல்லது தொலைபேசியை எடுத்துச் செல்லவோ அவர் அனுமதிக்கவில்லை என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறியது.
இந்த சூழலில் தான் 2016ம் ஆண்டில், பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவருக்கு மனநோய் இருப்பதாக உணர்ந்து, அது குறித்த உதவிக்காக சமூக சேவை நிறுவனங்களை அணுகியுள்ளார். அதன் பிறகு ஒரு ஒரு சமூக சேவை மையத்தின் ஆண் தலைவர் அந்த தம்பதியருக்கு உதவுவதற்காக அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
இதனையடுத்து அந்த மாதத்தின் பிற்பகுதியில் ஃபோங் அந்த சமூக சேவை மையத்திற்குச் சென்று மையத் தலைவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மேல் அவருடைய உதவி தேவையில்லை என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தவர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உடன்பிறந்தவர்களிடம் மையத் தலைவருடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறத் தொடங்கியுள்ளார்.
அதன் பிறகும் அந்த பெண் மீது சந்தேகம்கொண்டு சம்பவத்தன்று காலை 6 மணி முதல் 7.20 மணிக்குள் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் படுக்கையறைக்குள் சென்று, அவரை எழுப்பி, பலமுறை கத்தியால் குத்தியும், சரமாரியாக வெட்டியும் தாக்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் அவருடைய பெண்ணுறுப்பில் தாக்கினால் அவளால் அந்த அதிகாரியுடன் உடலுறவுகொள்ள முடியாது என்பதால் தான் தாக்கினேன் என்று கூறியுள்ளான் அந்த கொடூரன். அதன் பிறகு தகவலறிந்து வந்த போலீசார் அந்த பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த ஆடவரை கைது செய்தனர்.