TamilSaaga

கணவர் இறந்து ஓராண்டு கூட ஆகல… நண்பருடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மந்திரா பேடி – வரம்பு மீறி குவியும் விமர்சனங்கள்

வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சினிமா உலகில் அதிக புகழோடு வலம்வரும் பலர் நடிகர் நடிகைகளில் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடியும் ஒருவர். தொலைக்காட்சியில் தனது பயணத்தை துவங்கிய இவர் 1995ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான Dilwale Dulhania Le Jayenge என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

நேரடியாக தமிழ் மொழியில் இவர் நடித்து வெளியான ஒரே திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ம் ஆண்டு அடங்காதே என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார், ஆனால் அந்த திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பேஷன் டிசைனராகவும் வலம்வரும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ். Fitness Freakஆன மந்திரா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்ற எப்போதுமே மறந்ததில்லை.

மந்திரா 1999ம் ஆண்டு Raj Kaushal என்பவரை மணம்முடித்தார், Kaushal, 90களில் ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியோடு இணைந்து வெளிநாடு பயணம் என்று வாழ்க்கையை சிறப்பாக சென்றுகொண்டிருந்தது. மந்திரா மற்றும் ராஜுக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு.

சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குமரவேல் ராஜா.. வெளிநாட்டுக்கு அனுப்பி மகனை பலி கொடுத்த அவரது குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன?

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் நல்ல கணவன் மனைவியாக இருந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி ராஜ் மாரடைப்பு காரணமாக இறந்தார். அதன் பிறகு சில மாதங்கள் மந்திரா தனது சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக இல்லாத நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது நண்பர் ஆதி என்பாரின் பிறந்தநாள் விழாவில் அவரோடு நீச்சல் குளத்தில் பிக்கினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. கணவர் இறந்து இன்னும் ஓராண்டு கூட முடிவடையாத நிலையில் இப்படி நண்பரோடு அரைகுறை ஆடையில் அவர் கும்மாளம் அடித்து வருவதாக நெட்டிசன்கள் அவரை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் ‘ஷவர்மா’ விரும்பி சாப்பிடும் நபரா நீங்க? – இந்தியாவில் +1 மாணவி இறந்ததற்கு காரணம் உணவில் இருந்த ‘ஷிகெல்லா’ வைரஸ் என்பதை மறந்துடாதீங்க!

தனது கணவரின் இறப்புக்கு பிறகு தனது குழந்தைகள் தனக்கு மிகப்பெரிய பலமாக திகழ்ந்து வருகின்றனர் என்று அவர் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அந்த பிறந்தநாள் விழா புகைப்படங்கள் பலரை முகம்சுளிக்க வைத்துள்ளது.

ஆனால் தனது நண்பர்களோடு நேரத்தை செலவிடுவது அவரது சொந்த விஷயம் என்றும், இதில் நெட்டிசன்கள் குறைகூற ஒன்றுமில்லை என்றும் ஒரு சாரார் தெரிவித்துவருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts