ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன், கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, தனது குடியிருப்பின் அருகே உள்ள தெரு ஒன்றில், தனது காதலியை கொலைசெய்து அவரது உடலை நடுரோட்டில் இழுத்து சென்றதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று காலை 6 மணியளவில் அந்த வழியாக ஜாகிங் சென்ற சிலர், அந்த நபர் சாலையின் நடுவே ஒரு இழுவை பலகையின் மேல் சுற்றப்பட்ட பை ஒன்றை வைத்து அவர் இழுத்து செல்வதை கண்டுள்ளார். மேலும் அந்த பையின் வெளியே இரு கால்கள் நீண்டு இருந்ததையும் கண்டு அதிர்ந்துள்ளனர்.
உடனே அந்த ஜாகிங் சென்றவர்களில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு வந்த போலீசார் அந்த ஆடவரை தடுத்து நிறுத்தியதாகவும், பையில் இருந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் கூறினார்.
“இறந்தவரின் தலை Cling Film மூலம் சுற்றப்பட்டு கிடந்ததாகவும், கைகள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கொலை வழக்கில் 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி அந்த பிரேதத்தை ரோட்டில் இழுத்து சென்ற காட்சி இரண்டு CCTV கேமராக்களில் பதிவாகி இருந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர். கொலை செய்ததாக நம்பப்படும் அந்த நபரும் இறந்த அந்த பெண்ணும் ஒரே இடத்தில் வேலையில் இருந்தவர்கள் என்றும் காதலர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது, வடக்கு ஹாங் காங் பகுதியில் இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.