வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் உலக அளவில் கொண்டப்படவுள்ளது, நமது சிங்கப்பூரிலும் இந்த ஆண்டு உழைப்பாளர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் மே 1ம் தேதி ஞாயிற்று கிழமையில் வருவதால் அன்று அளிக்கப்பவேண்டிய ஓய்வு நாள் மறுநாளான மே 2 தேதி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல Hari Raya Puasa நாளான மே 3ம் தேதியும் அரசு விடுமுறை அளிக்கப்படவுள்ளது, ஆகவே சிங்கப்பூரில் பணிபுரியும் பல தொழிலாளர்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை தொடர்ந்து அளிக்கப்படவுள்ளது.
நிச்சயம் இந்த 4 நாள் விடுமுறையை சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். தற்போது எல்லைக்கட்டுப்பாடுகளும் தளர்வடைந்துள்ள நிலையில் பல பயணிகள் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வர விருப்புகின்றனர்.
அரசு அனுமதி, தேவையான விடுமுறைகள் நாட்கள் என்று எல்லாம் இருக்கின்றபோதும், தற்போதுள்ள உண்மை நிலவரம் என்னவென்றால் விமான சேவை மிகமிகக் குறைவாக உள்ளது என்பது தான். அதே நேரத்தில் விமான டிக்கெட்களின் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
Scoot போன்ற விமான சேவை நிறுவனங்களில் மே 4 தேதி வரை அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளது. மேலும் பிற விமான சேவை நிறுவனங்களில், படு வேகமாக டிக்கெட் புக்கிங் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சிங்கப்பூர் தமிழகம் மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள், தங்களது பயணத்தை குறைந்தது 3 முதல் 6 மாதத்திற்கு முன்னதாக புக் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தமிழகம் மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 2022 வரை துவங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.