TamilSaaga

பல்லாயிரம் கிலோமீட்டர் பயணம்.. ஒரே மாதத்தில் Food Delivery செய்தே 8500 வெள்ளி சம்பாதித்த “உழைப்பாளி” – எல்லாம் Hard Work நண்பா

சிங்கப்பூரில் Food Delivery மூலம் உங்களால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?. சிங்கப்பூரில் ஒரு Side வருமானத்தை சம்பாதிக்க நினைக்கும் பலருக்கு இது ஒரு மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. சரி, இதற்கான பதில் என்னவென்றால், நீங்கள் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அளவில் எவ்வளவு வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும், தற்போதுள்ள பல்வேறு உணவு விநியோக தளங்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கான உத்திகளை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் பொறுத்தே உள்ளது.

அன்று “கொத்தனார்” வேலை.. இன்று “Process Technician”.. 18 ஆண்டுகள் சிங்கப்பூரில் தவ வாழ்க்கை – சிங்கை வர நினைக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு “Real Life Hero”

இந்நிலையில் அந்த Calculation ஒன்றை மிகச்சரியாக கணித்துள்ளார் ஒரு சிங்கப்பூரர் என்று தான் கூறவேண்டும். சிங்கப்பூரில் உணவு டெலிவரி செய்யும் ஒருவர் கைப்பட எழுதிய பதிவின்படி, சிங்கப்பூரில் 31 நாட்கள் தொடர்ந்து உழைத்தால் S$8,511.64 சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். கையால் எழுதப்பட்ட அந்த விரிவான தகவல் நேற்று ஏப்ரல் 7 அன்று HardwareZone என்ற தலத்தில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ள அந்த Food Delivery நபரின் சாகசம் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளது. இது போலியான ஒன்றாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. ஆனால் இதை உன்னிப்பாக ஆய்வு செய்த பலர், இல்லை இது உண்மையில் அவர் கடினமாக உழைத்ததன் பலன் தான் என்று கூறுகின்றனர்.

ஆவர் கடந்த ஒரு மாதத்தில் அதிகமாக சம்பாதித்த ஒரு நாள் வருமானம் 443.79 வெள்ளி, மார்ச் 12 சனிக்கிழமையில் இந்த அளவு வருமானம் அவருக்கு கிடைத்துள்ளது. நிச்சயம் வார இறுதியில் இந்த அளவிற்கு பணம் கிடைப்பது சத்தியம் தான். அதே போல திங்கள், செவ்வாய் போன்ற வார நாட்களில் 101 முதல் 290 வெள்ளியை அவர் ஈட்டியுள்ளார்.ஆனால் நிச்சயம் குறைந்தது ஒரு நாளைக்கு அவர் 13 மணிநேரமாவது உழைத்திருக்க வேண்டும் என்றும் பலரும் கூறுகின்றனர்.

கைகளில் கூர்மையான ஆயுதம்.. இரக்கமில்லா தாக்குதல்.. இரத்தம் வழிய ஓடும் நபர் – Boon Lay Drive பகுதியை மிரள வைத்த “சம்பவம்”

அதே போல அந்த நபர் FoodPanda, GrabFood, Deliveroo என்று பல நிறுவனங்களுக்கு வேலை செய்துள்ளார். FoodPandaவை பொறுத்தவரை நீங்கள் shift முறையில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால் Deliveroo போன்ற நிறுவனங்களில் அது இல்லை. ஆகவே அவர் தனக்கு கிடைக்கும் நேரத்தை மிகச்சரியாக பிரித்து நல்ல முறையில் பணிசெய்துள்ளார். அதேபோல இந்த அளவிற்கு இவர் உணவு விநியோகம் செய்துள்ளதால் நிச்சயம் அவர் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் பலரும் கூறுகின்றனர்.

கணக்கில் கைதேர்ந்தவர்கள் பலர் சுமார் 400 வெள்ளிக்கு மேல் அவர் எரிபொருளுக்கு செலவளித்திருக்க வேண்டும் என்றும் கணக்கிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த அந்த நபர் இந்த அளவு பணத்திற்கு தகுதியானவர் என்று பல விமர்சகர்கள் கூறுவதை காணமுடிகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts