இன்று முதல் சிங்கப்பூரில் கூடுதலாக தளர்வுகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்ட அந்த சில தளர்வுகள் பின்வருமாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் 5 பேர் கொண்ட குழுவாக வெளியே உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
மேலும் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பட்சத்தில் இந்த மாத இறுதியில் இருந்து வெளியில் கூடுபவர்களின் எண்ணிக்கை 8 பேர் ஆக அதிகரிக்கப்படலாம். மேலும் திருமண விருந்துகள் நடைபெறலாம். குறிப்பாக கிருமி தொடர்பான பரிசோதனை முன்னதாக செய்தவர்கள் 250 பேர் வரை ஒரு திருமண விருந்தில் பங்கேற்றுகொள்ளலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியது.
மேலும் வீடுகள் மற்றும் பொதுஇடங்களில் நடைபெறும் உட்புற நடவடிக்கைகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்படுகிறது. மேலும் வெளிப்புறங்களில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை 50கஆக அதிகரிக்கப்படும்.
பணியிடங்களில் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் இனி நடைபெறலாம், வேலை இடங்களில் அதிகபட்சமாக 50 வரை ஒன்றுகூடலாம். இருப்பினும் தேவையான இடங்களில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை தொடரும். நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று இடைமறிக்காத வேலை நேரத்தை பின்பற்ற வேண்டும். இருப்பினும் இந்த தளர்வுகள் எப்போது அமலுக்கு வரும் என்பதை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதயும் சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை.