TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவர்கள் கவனத்திற்கு – விரைவில் அறிமுகமாகும் புதிய M FIN சீரிஸ்

FIN என்றால் என்ன ?

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoint Authority – ICA) ஒரு புதிய வெளிநாட்டு அடையாள எண் தொடரை வரும் 20 ஜனவரி 2022 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. FIN என்பது ICA மற்றும் அரசு நிறுவனங்களால் சிங்கப்பூரில் வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரியும், படிக்கும் அல்லது வசிக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தனித்துவமான அடையாள எண்கள்.

இதுவரை வழங்கப்பட்ட FINகள்

சிங்கப்பூரை பொறுத்தவரை, சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு தற்போது S அல்லது T முன்னொட்டுடன் அடையாள எண்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நீண்ட கால குடியேற்றம் அல்லது பணி பாஸில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு தற்போது F அல்லது G முன்னொட்டுடன் FIN கள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2000மாவது ஆண்டு வரை F சீரிஸ்வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. மேலும் இந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை G சீரிஸ் வழங்கப்படும்.

F மற்றும் G சீரிஸ் வைத்திருப்போர் பாதிக்கப்படுவார்களாக ?

சிங்கப்பூரில் நீண்டகாலமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை பதிவுசெய்து அடையாளம் காண ICA மற்றும் அது தொடர்புடைய அரசு நிறுவனங்கள் தங்கள் கடமைகளைச் செய்ய அனுமதிக்க புதிய FIN தொடரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

தற்போது Fமற்றும் G FIN தொடர்களுடன் நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் M FIN தொடரின் அறிமுகத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று ICA உறுதியளித்துள்ளது.

2022 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதிய தொடர்களை ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து அரசு நிறுவனங்களும் அவற்றின் அமைப்புகளுக்கு தேவையான மேம்பாடுகளைச் செய்யும்.

Related posts