TamilSaaga

“சிங்கப்பூரில் பிரச்சனையில் தவித்த வெளிநாட்டு பெண்” – ICA அதிகாரி என்று பொய் சொல்லி “உல்லாசம்” அனுபவித்த சிங்கப்பூரர்

சிங்கப்பூரில் கெல்வின் லிம் சீ வீ என்ற நபர் ஒருவர் ஒரு மசாஜ் செய்யும் பணியாளரிடம், தான் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரி என்று கூறி பொய்யுரைத்துள்ளார். Masseuse என்று அழைக்கப்படும் மசாஜ் செய்யும் அந்த சீன பெண் அவரது குடியேற்றம் தொடர்பான சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் தான் லிம் அந்த பெண்ணுக்கு குறுக்கு வழியில் உதவுகிறேன் என்று கூறி அதற்கு பதிலாக, அந்த பெண்ணிடம் இருந்து பணத்தையும், பாலியல் சேவைகளையும் தனக்கு தருமாறு கேட்டுள்ளார்.

சிங்கப்பூர் பார்லிமென்டில் கம்பீரமாக ஒலித்த “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடல் – கடைசி வரை தமிழகத்தில் தான் எந்த ஊர் என்பது தெரியாமலேயே மறைந்த அதிபர் எஸ்.ஆர்.நாதன்

இந்நிலையில் 44 வயதான லிம், நேற்று வியாழன் (மார்ச் 24) அன்று, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து மற்றும் மசாஜ் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை உள்ளடக்கிய ஆறு குற்றச்சாட்டுகளில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு தற்போது 23 வார சிறைத்தண்டனையும் $6,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மசாஜ் நிறுவனத்தில் வேலை செய்த Wenjuan என்ற அந்த 32 வயது சீன பெண், ஏற்கனவே ஒரு உண்மையான ICA அதிகாரிக்கு பாலியல் ரீதியாக லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் இறந்ததைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது. Wenjuan ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடிவாரத்தில் இறந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று வியாழன் அன்று நீதிமன்றத்தில் பேசிய துணை அரசு வழக்கறிஞர் டேவிட் மேனன் கூறுகையில், கடந்த 2019 மார்ச் மாத வாக்கில், சிங்கப்பூரரான லிம், செங்குடன் பழகி அவரது Regular Customerஆக மாறியுள்ளார் என்றார். அவர்கள் முக்கியமாக WeChat மொபைல் செயலி மூலம் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மே 11, 2019 அன்று, குற்றம் சாட்டப்பட்டவரிடம் தனக்கு சட்டச் சிக்கல்கள் இருப்பதாக செங் கூறியுள்ளார். இந்நிலையில் அதை தான் சரிசெய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார் அந்த ஆசாமி.

அதுவரை அந்த பெண்ணுடன் உடல் உறவு கொண்டதிற்கு பணம் கொடுத்து வந்த குற்றவாளி இந்த நிகழ்விற்கு பிறகு பணம் வழங்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றது. இது போல பல சந்தர்ப்பங்களில் தனக்கு உதவுவார் என்று எண்ணி இலவச பாலியல் சேவைகளை அந்த பெண் வழங்க ஒரு கட்டத்தில் அந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதியில் தான் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. எனது குடிவரவில் பிரச்சனை உள்ளது என்று கூறியுள்ளார். உடனே உனக்கு Special Pass எடுக்க 15,000 வெள்ளி செலவாகும் கைதிலிருந்து தடுக்கவும் நிறை செலவாகும் என்றும் கூறியுள்ளார் குற்றவாளி.

“லட்டு” போல துபாய் வந்திறங்கிய மாடல்.. பாஸ்ப்போர்ட்டில் “Male” என்ற அடையாளம்.. 19 மணிநேர “Nonstop” விசாரணை – மீண்டும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

இதுபோல பல சந்தர்ப்பங்களில் அந்த பெண்ணிடம் இருந்து பணத்தையும் அந்த ஆசாமி பெற அவரும் அவர் ICA அதிகாரி இல்லை என்பது அறியாமல் பணத்தையும் பாலியல் சேவைகளையும் கொடுத்து ஏமாந்துள்ளார். ஆனால் இறுதியில் அந்த நபர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது நீதிமன்ற ஆவணங்களை குறிப்பிடப்படவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts