யுனெஸ்கோவின் (UNESCO) கலாச்சார பாரம்பரிய (ICH) பட்டியலில் இடம்பெற நமது சிங்கப்பூர் சார்பில் 10 விழாக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில், Chingay அணிவகுப்பு மற்றும் தைப்பூச திருவிழா ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று Culture, Community and Youth அமைச்சர் லோ யென் லிங் நேற்று (மார்ச்.10) அறிவித்துள்ளார்.
தைப்பூசம்
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நல்ல நாளே தைப்பூசமாக தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது. இது கடவுள் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம், முருக பக்தர்கள் பலர் விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம்.
பழனி முருகன் ஞானவேலை பெற்றதால் மற்ற முருகன் கோவில்களை காட்டிலும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவானது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். முருகன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.
நமது சிங்கப்பூரிலும் வெகு விமர்சையாக தைப்பூசம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், சிங்கப்பூர் சார்பில் யுனெஸ்கோவின் (UNESCO) கலாச்சார பாரம்பரிய (ICH) பட்டியலில் இடம்பெற தைப்பூசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Chingay அணிவகுப்பு மற்றும் தைப்பூச திருவிழா தவிர்த்து,
birthing traditions
Malay art form dikir barat
getai
the making and sharing of kueh
orchid cultivation
Peranakan beadwork and embroidery
traditional medical practices
yusheng
ஆகியவையும் சிங்கப்பூர் அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.