TamilSaaga

இயக்குநர் பாலாவின் மனைவிக்கு “பிரபல” அரசியல் புள்ளியின் மகனுடன் தொடர்பு? – தமிழ் சினிமாவை அதிரவைக்கும் பயில்வானின் குற்றச்சாட்டு

உலக அளவில் ஹாலிவுட், கோலிவுட் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் கோலிவுட் திரைப்படங்களுக்கான மவுசு எப்போதும் அதிகமே. தமிழ் திரையுலகை பொறுத்தவரை நடிகர், நடிகைகள் மட்டுமல்ல பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் தொடங்கி ஸ்டண்ட் கலைஞர்கள் வரை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர்களாக உள்ளனர் என்றால் அது மிகையல்ல. சினிமாவை கப்பல் என்று கொண்டால் அதன் கேப்டன் என்ற பதவி இயக்குநருக்குத் தான். அந்த வகையில் வெகு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இயக்குநர்களில் பாலாவும் ஒருவர்.

பிறந்தது விடிவு காலம்! இந்தியாவில் மார்ச் 27 முதல் சர்வதேச விமான சேவை தொடக்கம் – சிங்கப்பூரில் இருந்து இனி அடுத்த நொடி இந்தியா வரலாம்!

தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர் அவர், சேது திரைப்படம் நடிகர் விக்ரம் அவர்களுக்கும் ஒரு Turning Point என்றே சொல்லவேண்டும். இறுதியாக 2018ம் ஆண்டு நாச்சியார் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த பாலா அதன் பிறகு சூர்யா அவர்களுடன் மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது கோலிவுட் திரையுலகின் மிகப்பெரிய Talk அவருடைய மனைவியுடனான விவாகரத்து தான்.

முத்துமலர் என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாலாவிற்கு பிரார்த்தனா என்ற மகளும் உள்ளார். சுமார் 17 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை கசப்பின்றி நகர்ந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பாலாவும் அவரது மனைவியும் மனதளவில் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏதோ சில கரங்களுக்காக இருவரின் உறவில் ஏற்பட்ட விரிசல் அதிகரிக்க இருவருக்கும் சென்னை குடும்பல நீதிமன்றம் கடந்த மார்ச் 5ம் தேதி விவாகரத்து வழங்கியது.

இதனையடுத்து இவர்களுடைய விவாகரத்துக்கான காரணம் குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான திரு. பயில்வான் ரங்கநாதன். இந்த விவகாரம் குறித்து அவர் பேசுகையில் “பாலாவிற்கு ஆரம்பத்தில் திருமண ஆசை இல்லை, தாய் தந்தையின் வற்புறுத்தலால் மதுரையை சேர்த்த கோடீஸ்வரர் (காங்கிரஸ் கட்சி பிரமுகர்) வீட்டு மகளான முத்து மலரை திருமணம் செய்துகொண்டார்” என்று பயில்வான் கூறியுள்ளார். “பாலா கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர், ஆனால் தனது மனைவி முத்து மலருக்காக சில மத சம்பர்தாயங்களை ஏற்றுக்கொண்டார். அதில் அவரது மகளுக்கு காதுகுத்திய நிகழ்வும் ஒன்று” என்கிறார் பயில்வான்.

“தற்போது விவாகரத்து பெற்றுள்ள நிலையில் சுமார் 4 ஆண்டுகளாகவே மனரீதியாக அவர்கள் விலகி உள்ளார்கள். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்த நேரத்தில், அப்போது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த ஒருவருடைய மகனுடன் கல்லூரி காலம் முதலே முத்து மலர் நட்பாக இருந்ததாகவும், இருவரும் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வந்துள்ளனர்” என்றும் கூறுகிறார் ரங்கநாதன். அந்த கல்லுரி நட்பை முறிக்கத்தான் பாலாவுடன் திருமணம் நடந்ததாகவும், அதேபோல முத்து மலரும் கல்யாணம் முடிந்தபிறகு பாலாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகவும்” கூறினார் பயில்வான்.

சிங்கப்பூர் Sex பயிற்சியாளர் : கருப்பையின் சிறப்பை உணர்த்தும் NFT-கள் விற்பனைக்கு – குவியும் மக்களின் பாராட்டு

“ஆனால் பாலாவிற்கு இருந்த குடிப்பழக்கமும், இரவில் பல நாட்கள் வீடு திரும்பாமல் தனது அலுவகத்தில் தங்கியதும் மனைவி முத்து மலருக்கு விரக்தியை கொடுத்துள்ளது. அதற்கு மேல் அவர்கள் அந்தரங்கங்களை கூற நான் விரும்பவில்லை” என்கிறார் பயில்வான். கணவன் மீது கொண்ட வெறுப்பு மீண்டும் அவரை அந்த கல்லூரி நட்பை தேடவைக்க இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது. பாலா மற்றும் அவர் முன்னாள் மனைவி முத்து மலர் ஆகிய இருவர் மீதும் இருவருக்கும் இருந்த மனக்கசப்பே தற்போது விவாகரத்தாக மாறியுள்ளது என்று கூறி முடித்தார் பயில்வான்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts