சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல், ஊழியர்கள் அவர்களுக்கான நோய்வாய்ப்பட்ட விடுப்பைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, வருகை தொடர்பான ஊக்கத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும் நிறுவனங்கள் “அமலாக்க நடவடிக்கையை” எதிர்கொள்ள நேரிடும் என்றும். இதில் பணி அனுமதிச் சலுகைகளை நிறுத்தி வைப்பதும் அடங்கு என்றும் மனிதவள மூத்த இணை அமைச்சர் கோ போ கூன் நாடாளுமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
“நியாயமான மற்றும் முற்போக்கான வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணி (TAFEP) இன்னும் இதுபோன்ற திட்டங்களைத் தொடரும் முதலாளிகளை அவ்வாறு செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தும்,” என்றும் அவர் கூறினார். மேலும் “அவர்கள் இந்த நடைமுறையைத் தொடர்ந்தால், அமலாக்க நடவடிக்கை எடுக்க மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) TAFEP பரிந்துரைக்கும்” என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
டாக்டர் கோ, நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் என்ஜியின் (PAP – Nee Soon) ஒரு நாடாளுமன்றக் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, தொழிலாளிகளுக்கு Attendance Bonus வழங்கும் நிறுவனங்களை அரசு தடுக்குமா? ஏன் என்றால் அது தொழிலாளர்கள் நோய்வாய் படும்போது அவர்களை மருத்துவ விடுப்பு எடுக்க அது தடையாக இருக்கின்றது என்று கூறினார். மாதாந்திர வேலை ஊக்கத்தொகையை இழக்க விரும்பாததால், கோவிட்-19 ஸ்வாப் பரிசோதனையை மறுத்ததற்காக Pest Control தொழில்நுட்ப வல்லுநர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் விவாதப்பொருளாக மாறிய பிறகு தான் இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு, “நியாயமான மற்றும் புறநிலையான முறையில் பணியாளர்களை மதிப்பிடுவதற்கும் ஊதியம் வழங்குவதற்கும்” ஏற்கனவே TGFEPக்கு முதலாளிகள் தேவைப்படுவதாக MOM இன் முந்தைய பதிலை டாக்டர் கோ எடுத்துரைத்தார். வருகை தொடர்பான ஊக்குவிப்புத் திட்டங்கள் காலப்போக்கில் “தவறுதலைத் தடுக்கவும் மேலும் ஒழுக்கமான பணியாளர்களை ஊக்குவிக்கவும்” உதவும் ஒரு வழியாக தோன்றியிருக்கலாம் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பிப்ரவரி 14 அன்று தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.