சிங்கப்பூரில் SMRT சர்வீஸ் எண் 972ன் பஸ் கேப்டன் செய்த செயல் பலரின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது என்றே கூறலாம். கடந்த பிப்ரவரி 6ம் தேதி, குளிரான அந்த மதிய நேரத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்து. அதே நேரத்தில் அது பயணிகள் தங்கள் பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறாகவும் இருந்தது, ஆனால் குறிப்பிட்ட அந்த பஸ் கேப்டன் தன் பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளை மழையில் நாணய விடாமல் குடை பிடித்து நின்றுள்ளார்.
சிங்கப்பூர் Far East Plaza பேருந்து நிறுத்தத்தில் இந்தக் காட்சியைக் கண்ட மதர்ஷிப் வாசகர் ஒருவர் பேருந்து ஓட்டுநரைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது கூற்றுப்படி, அன்றைய தினம் குறிப்பிட்ட அந்த பகுதியில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையை நிழற்குடையின் கீழ் நின்றவர்கள் கூட உணர்ந்தனர் என்று அந்த பெண்மணி விவரித்துள்ளார்.
இருப்பினும், பஸ் கேப்டனின் இந்த செயல் பயணிகளை மட்டுமல்ல, அங்கு குழுமியிருந்த பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியது என்றே கூறலாம் என்று அந்த வாசகர் கூறினார். தான் பொறுப்பேற்றிருக்கும் தனது வேலையில் திறன்பட செயல்பட்டது மட்டுமல்லாமல் மனித நேயத்துடனும் செயல்பட்ட அவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.