சிங்கப்பூர்.. திரு ரஹ்மான் ரசாலி, தான் சுத்தம் செய்யவிருக்கும் பிளாட்டின் வாசலில் நின்று மௌனமாக சில பிராத்தனைகளை செய்கின்றார். பாதுகாப்பு உடைகளை அணிந்தபடி, மரணத்தின் வாசனையை மறைப்பதற்காக பிளாட்டின் உரிமையாளர் வாசலில் வைத்த ஊதுவர்த்திகுச்சிகளின் புகையின் போக்குகளை கடந்து ரஹ்மான் உள்ளே செல்கிறார். சிங்கப்பூரை செயல்பட்டு வரும் துப்புரவு நிறுவனமான DDQ சேவைகளின் இணை நிறுவனரான திரு ரஹ்மான் (வயது 39), சில நாட்களுக்குப் பிறகு அல்லது இறந்த சில வாரங்கள் ஏன் சில மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உடல்களின் சிதைவுகளை சுத்தம் செய்ய அழைக்கப்படுகிறார்.
அவர் CNA செய்தி நிறுவனத்திற்கு பகிர்ந்த சில கருத்துக்கள் இதோ.. “கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று நாங்கள் வந்த இந்த ஜூரோங் ஈஸ்ட் பிளாட் இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு யூனிட், அங்கு இறந்தவர் தனியாக வசித்து வந்துள்ளார். உலர்ந்த இரத்தம் மற்றும் உடல் திரவங்கள் படுக்கையறையில் உள்ள மேசை மற்றும் தரையை ஆழமான மெரூன் நிறத்தில் பரவிகிடைக்கிறது. சுற்றியிருந்த பொருட்களிலும் ரத்தம், அது வீட்டை போல அல்லாமல் கிடங்கு போல தோற்றமளித்தது என்று கூறவேண்டும். சுவரில் வண்ணப்பூச்சுகள், கைவினை கருவிகள், ஒரு சிறிய அடுப்பு, ஒரு சிறிய பானை, நூடுல்ஸ் பொட்டலங்கள் மற்றும் சில பாத்திரங்கள் அருகில் இருந்தன.
திரு ரஹ்மான் மற்றும் அவரது உதவியாளரான 18 வயதான கஸ்ரினா, அறையில் உள்ள அனைத்து மேற்பரப்புகள் மற்றும் பொருட்கள் மீது கிருமிநாசினியை தெளிக்கும்போது, அந்த வாசனையானது அழுகிய சதை மற்றும் இரத்தத்தின் வாசனையுடன் கலந்துவிடுகிறது. இடுக்கி மற்றும் ரப்பர் கையுறைகள் அணிந்து, அவர்கள் இரத்தத்தால் சூழப்பட்ட அனைத்து பொருட்களையும் எடுக்கிறார்கள். அவை 10க்கும் மேற்பட்ட பெரிய குப்பை பைகளை நிரப்புகின்றன. இது அவர்கள் வழக்கமாக சந்திக்கும் குப்பையை விட இரண்டு மடங்கு அதிகமாகும், என்றார் அவர்.
அந்த அறையில் ஒரு இடத்தைக் காலி செய்ய மட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. திரு ரஹ்மான் தண்ணீர் இடைவேளைக்காக வெளியே செல்கிறார். சுமார் மூன்று மணி நேரம் உடுத்தியிருந்த PPE கருவிகள் அவர்களை இருக்குறது. மீண்டும் பணிக்கு திரும்புகிறார், ஒரு கட்டத்தில், அவர்கள் இரத்தக் கறை படிந்த பணப்பையை கண்டுபிடித்தனர், அதை திரு. ரஹ்மான் பிளாட் ஓனர் டானிடம் காட்டுகிறார். அவரோ திரு ரஹ்மானிடம் வேண்டாம் என்ற பாணியில் தலையை அசைக்கிறார், உடனே அதுவும் மீதமுள்ள குப்பைகளுடன் சேருகிறது.
திரு. டான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இறந்தவர் தனது நண்பர் என்று கூறினார். அந்த நண்பர் அவருடைய குடும்பத்துடன் பழகாததால், தனது சொந்த பிளாட் கட்டிமுடிக்கப்படும் வரை இங்கு தங்கியிருந்ததாக டான் கூறினார். துப்புரவு நடவடிக்கைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, பிளாட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழையவிருந்த காவல்துறை அதிகாரிகளிடமிருந்து திரு டானுக்கு அழைப்பு வந்தது. வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினரும் போன் செய்துள்ளனர்.
திரு. ரஹ்மான் சில சமயங்களில் இரண்டு மாதங்கள் கண்டுபிடிக்கப்படாத உடல்களைக் கூட கண்டுள்ளார். பலர் இந்த வேலையை கொடூரமானதாக நினைக்கும் போது, அவர் துன்பத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவுவதாக அதை உணர்கிறார். இறுதி சந்தங்களுக்கு அவர்கள் தயாராகும் நேரத்தில் என்னால் இயன்றதை அவர்களுக்கு செய்கின்றேன் என்றார் ரகுமான். அதே போல அவரும் சில சமயங்களில் இந்த வேலையில் உணர்ச்சிவசப்படுவார் என்றும், ஆனால் அது அவரை மனிதனின் வாழ்க்கையை மேலும் நேசிக்க வைத்ததாக அவர் நம்புகிறார்.