TamilSaaga

காதலனின் அருவருப்பான Habit.. கேட்கும் நமக்கே வாந்தி வந்துவிடும் போல.. காதலிச்ச பாவத்துக்காக விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண்!

இப்படியெல்லாம் மனுஷங்க இருப்பாங்களா? என்ற நினைக்கும் அளவுக்கு ஒரு மனிதர் இங்கு இருக்கிறார். ஆனால் அவரை நேசித்த காதலி இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Mumsnet என்ற தளத்தில், தனது காதலனின் முகம் சுழிக்க வைக்கும் பழக்கம் குறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் காதலிப்பவர்கள் அவர்கள் காதிலிருந்து எடுக்கப்படும் அழுக்கையோ, மூக்கில் இருந்து வரும் சளியையோ, தூக்கத்தின் போது கண்களில் ஓரம் தேங்கி நிற்கும் கசடையோ விரும்பி எடுத்து சாப்பிடுகிறார் என்றால், உங்களால் எப்படி அதை சகித்துக் கொள்ள முடியும்?

ஆனால், என்னுடைய காதலர் அப்படி செய்கிறார். இது அவருக்கு சர்வ சாதாரண செயலாக இருக்கிறது. நான் எவ்வளவோ சொல்லியும், அவரால் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. உண்மையில் எப்படி நீங்கள் இதை சகித்துக் கொள்ள முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் ஒரே பர்ஸில் அனைத்தையும் இழந்த தமிழக ஊழியர்.. Work permit, ATM Card, டிரைவிங் லைசன்ஸ் என எல்லாமே போச்சு.. கண்டுபிடித்துத் தர உதவுமாறு உருக்கமான வேண்டுகோள்!

மேலும், “நான் காதலிக்கும் நபருக்கு இப்படியொரு அருவருப்பான பழக்கம் இருக்கிறது. அவர் மீது அளவுக்கடந்த அன்பை வைத்துவிட்டேன். இப்போது இந்த சிக்கலில் இருந்து எப்படி மீள்வது என்பதே எனக்கு புரியவில்லை” என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மனிதனின் உடலில் இருந்து வெளியேறுவதில் தாய்ப்பாலை மட்டும் தான் உட்கொள்ள முடியும். அதைத் தவிர்த்து உடலில் இருந்து வெளியாகும் வேறு எதையும் உட்கொள்ள முடியாது. ஆனால், அப்பெண்ணின் காதலுனுக்கு இப்படியொரு பழக்கம் இருப்பதால், தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்ப்பதே சிறந்தது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts