TamilSaaga

தரையிறங்கும் போது விமானம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அமெரிக்காவில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்டு கனடாவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரிலிருந்து கனடாவின் டொரன்டோவிற்கு புறப்பட்ட Endeavor Air Flight 4819 விமானம், 80 பயணிகளுடன் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையிறங்கிய பிறகு தலைக்குப்புற கவிழ்ந்தது.

விமானத்திற்குள் பயணிகள் அலறியபோது 17 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கனடாவின் பல பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், டொரண்டோவிலும் பனிப்புயல் வீசியது இந்த Endeavor Air Flight 4819 விமான விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துடன் தொடர்புடைய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன, இது நிகழ்வின் திடுக்கிடும் தருணங்களை வெளிப்படுத்துகின்றது. விமானம் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சிகள் மற்றும் தீ பிடிக்காதவாறு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

விமான கட்டுப்பாட்டை இழந்தது பனிப்புயலின் தாக்கமா அல்லது பிற தொழில்நுட்ப கோளாறு என்ற கேள்விக்கான பதில்களை விரைவில் அதிகாரிகள் வெளியிட உள்ளனர்.

பனிப்புயல் காரணமாக டொரண்டோ மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான உஷார் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் விபத்து காரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விமான விபத்து காரணமாக டொரண்டோ விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு காலதாமதம் ஆகியுள்ளது. அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகமும் விமான சேவை பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts