TamilSaaga

கவனிக்காமல் விடப்பட்ட 2 வயது சிறுவன் : Photoshootல் மூழ்கியிருந்த பெற்றோர் – அனைவருக்கும் இது ஒரு பாடம்

தாய்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் ஒருவர் போட்டோஷூட் எடுக்க சென்ற நேரத்தில் ஒரு எதிர்பாராத சோக சம்பவம் நடந்துள்ளது. Yahoo நியூஸ் ஆஸ்திரேலியாவின் கூற்றுப்படி, 26 வயதான Only Fans தளத்தின் மாடலான வியாடா பொண்டாவி, கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று பட்டாயா வில்லாவில் நடந்த வீட்டில் பார்ட்டியில் தனது கணவர் (புகைப்படக் கலைஞர்) மற்றும் இரண்டு மகன்களுடன் இருந்தார். விருந்தில் கலந்துகொண்ட மாடல்களுக்கு வியாடாவின் கணவர், புகைப்படக் கலைஞரான பொங்கிரிட் உடன் போட்டோஷூட் நடத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.

சிங்கப்பூரில் மார்ச் 31க்குள்… Work Permit மற்றும் S-Pass வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான “முக்கிய” அறிவிப்பை வெளியிட்ட MOM

இந்நிலையில் தான் சவானாகோன் ஹஞ்சரோஎன்பன்னா என்ற அவர்களது இரண்டு வயது மகன், மாலை நேரத்தில் அந்த பங்களாவின் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் அவனது தாயார் வீட்டிற்குள் கணவருடன் போட்டோஷூட் எடுத்துக்கொண்டு இருந்ததாக தக்வல்கள் கூறுகின்றது. நான் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் நீச்சல் குளத்தில் இருந்து சத்தம் கேட்டது, மேலும் அங்கு என் மகன் கிடப்பதும் தெரிந்தது என்று அந்த கணவர் செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

அவன் தண்ணீரில் தத்தளிப்பதை கண்ட நான் உடனடியாக தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்ற முயன்றேன் ஆனால் அது பலனளிக்கவில்லை. தாய்லாந்து நாட்டு செய்திகளின் வெளியிட்ட புகைப்படங்களில், சவாங் போரிபூன் தம்மசாதன் மீட்பு சேவையில் இருந்து வந்த மீட்பு பணியாளர்கள் சிறுவனுக்கு சிகிச்சை செய்துகொண்டிருந்ததும். வில்லாவின் வெளியே மக்கள் கூட்டம் கூடிநின்ற காட்சிகளை காட்டியது.

மீட்புக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் அந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை. இறுதியில் அந்த சிறுவன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது, சிறுவனின் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த அப்பகுதி போலீசார் விசாரணையை விரைந்து தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

சத்தமே இல்லாமல் நடந்த “கப்சிப்” சந்திப்பு – “திடீர்” சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிங்கை – இந்திய அமைச்சர்கள்

மீட்புக் குழுவில் இருந்த தலைமையதிகாரி பேசும்பொழுது “பெற்றோர்கள் வீட்டிலும், வெளியிடங்களிலும் தங்கள் நேரத்தை செலவிடும்போது விபரம் தெரியாத தங்கள் இளம் வயது பிள்ளைகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று” கோரிக்கை விடுத்துள்ளார். மகனை இழந்த அந்த பெற்றோர்களும் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மகனை இழந்த அந்த தாயின் கண்ணீர் பலரை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts