TamilSaaga

உயிரிழந்து 19 நாட்கள் கழித்து… வெளிநாட்டு ஊழியர் பாலசுப்பிரமணியன் உடல் தகனம்.. மருத்துவமனை நிர்வாகத்திடம் 3 வாரமாக நடந்த ‘பேரம்’ – காலக்கொடுமை!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா செம்போடை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் த/பெ முருகையன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி கடந்த மே மாதம், அதாவது 24.05.2022 அன்று உயிரிழந்தார்.

இந்த தகவல் ‘தமிழக சேவை குழு மலேசியா’ என்ற அமைப்புக்கு தெரிய வர, அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம், பாலசுப்பிரமணியனின் சிகிச்சை தொகையை குறைத்துக் கொள்ள வேண்டுகோள் வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியதில், அவர்களும் சற்று மனது வைக்க, இறந்த பாலசுப்பிரமணியனின் உடல் கடந்த 12.06.2022 அன்று கிள்ளானில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதில், மலேசியாவில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணியனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க – “சாப்பிட்டு காசு கொடுக்க வேண்டாம்” – வயிறார சாப்பாடு.. நிறையும் மனசு – சிங்கப்பூர் “அன்னலக்ஷ்மி” உணவகம்

ஆனால், கடந்த மே மாதம் 24ம் தேதி உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் உடல், ஜூன் 12ம் தேதி தான் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 19 நாட்கள் கழித்து தான் அவரது உடல் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

‘தமிழக சேவை குழு மலேசியா’ அமைப்பின் தலைவர் காளையப்பனுக்கு தான், இந்த இறப்பு தகவல் முதன் முதலாக கிடைத்துள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அவர் தான் தொடங்கி வைத்திருக்கிறார். பிறகு மருத்துவமனை நிர்வாகத்திடம் டத்தோ தெட்சிணாமூர்த்தி என்பவரும், கைலாசம் காஸ்கெட் டத்தோ குணா (எ) குணேந்திரன் என்பவரும் தான், சிகிச்சை செலவை குறைத்துக் கொள்ளும் படி வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

இவர்கள் இல்லையெனில், சுப்பிரமணியனின் உடல் இன்னும் எவ்வளவு நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts