மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் சில தினங்களுக்கு முன்பு கடந்த ஆண்டில் ஏற்பட்ட பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டலை இதையும் படியுங்கள் : சொகுசு கார் மோதி மூவருக்கு காயம் – சிங்கப்பூர் ஸ்தம்பித்த சாலைஆதரிப்பதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் US$60,000 (S$82,000) தொகையை அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் (MFA) கடந்த டிசம்பர் 22 வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மலேசிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தலா 50,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்குவதற்கு இந்தப் பங்களிப்பு துணைபுரியும் என்று அமைச்சகம் கூறியது.
இதையும் படியுங்கள் : சொகுசு கார் மோதி மூவருக்கு காயம் – சிங்கப்பூர் ஸ்தம்பித்த சாலை
“மலேசியாவில் வெள்ளம் மற்றும் பிலிப்பைன்ஸில் ராய் சூறாவளி பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. மற்றும் பரவலான அளவில் பலருடைய சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளது, பல சமூகங்களுக்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது” என்று MFA தெரிவித்துள்ளது. “ஒரு நெருங்கிய நண்பராகவும், சக ஆசியான் உறுப்பு நாடாகவும், சிங்கப்பூர் இந்த கடினமான நேரத்தில் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு ஆதரவாக நிற்கிறது” என்றும் அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில் மலேசியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத இந்த மழைவெள்ளம் காரணமாக பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். ஆனால் துன்பம் என்ற ஒன்று வரும்போது அதிலிருந்து மக்களை காக்க உதவிக்கரம் என்ற ஒன்று வரும் அல்லவா. அதேபோலத்தான் மலேசியாவிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல்வேறு பின்னணியில் உள்ளவர்கள் ஒன்று கூடுவதாக செய்திகள் வந்துள்ளன. குறிப்பாக ட்விட்டர் பயனர் nurassyaheera என்பவர், தன்னார்வலர்கள் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்த விஷயத்தில் வயதும் கூட ஒரு பொருட்டு அல்ல என்று கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
“வயது ஒரு தடையல்ல, இந்த இளைய தன்னார்வத் தொண்டருக்குப் பாராட்டுக்கள்” என்ற தலைப்புடன், சிவப்பு நிற சட்டை, அணிந்த ஒரு சிறுவனின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. டிசம்பர் 28 அன்று வெளியிடப்பட்ட ட்வீட், 6,300-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் 14,400-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. World of Buzz செய்தி நிறுவனம் அளிக்கும் தகவலின்படி, இந்த புகைப்படங்களை பகிர்ந்த ட்விட்டர் பயனர், அந்த சிறுவன் ஒரு நண்பரின் மருமகன் என்று தெளிவுபடுத்தினார்.
“உன் நண்பர்களுக்கு நீ ஒரு முன்மாதிரியாக இருப்பீர், அதனால் நீ செய்யும் நற்செயல்களை அவர்கள் பின்பற்றுவார்கள். என் குழந்தைகளும் உன்னை கண்டு வியந்து பாராட்டுகின்றனர் என்று ஒருவர் தனது கருத்தை பகிர்ந்த நிலையில். பலரும் தற்போது இந்த சிறுவனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் அவனுடைய பெற்றோரின் வளர்ப்பு இதில் தெரிகின்றது என்று கூறி அந்த சிறுவனின் பெற்றோரையும் பாராட்டி வருகின்றனர்.