TamilSaaga

போலீசை கொன்ற கைதி.. தனிமையில் சந்தித்து முத்தம் தந்த பெண் நீதிபதி : வெளியான CCTV காட்சி

அர்ஜென்டினாவில் காவலரைக் கொன்ற ஒரு குற்றவாளிக்கு, ஒரு பெண் நீதிபதி முத்தமிடும் காட்சி அங்குள்ள CCTVயில் பதிவான நிலையில் முத்தமிட்ட பெண் நீதிபதி தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார். கடந்த டிசம்பர் 29, 2021அன்று சிறையில் இருந்த கிறிஸ்டியன் ‘மாய்’ புஸ்டோஸ் என்ற கைதியை தெற்கு சுபுட் மாகாணத்தில் உள்ள அந்த நீதிபதி மரியல் சுரேஸ் முத்தமிடுவது அங்கிருந்த CCTVயில் பதிவாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த ஒரு விசாரணையின் போது இதே குற்றவாளியை மரியல் ஆயுள் தண்டனையிலிருந்து காப்பாற்ற முயன்றார் என்று டெய்லி மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : பழ லாரினு நினைத்து சோதனை செய்த சிங்கப்பூர் ICA அதிகாரிகள் : ஆனா சிக்கியது வேற பொருள்

தற்போது, ​​அவர்கள் தங்கள் அந்தரங்கமான தருணத்தை பகிர்ந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2009ல் போலீஸ் அதிகாரி லியாண்ட்ரோ ‘டிட்டோ’ ராபர்ட்ஸைக் என்பவரை கொன்றதற்காக புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் நீதிபதிகள் குழுவில் மரியல் ஒரு அங்கமாக இருந்து வருகின்றார். அதே போல இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்த நபரின் ஆயுள் தண்டனைக்கு எதிராக வாக்களித்த ஒரே நீதிபதியும் இவர் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஒரு ‘மிகவும் ஆபத்தான கைதி’ என்று கூறப்பட்டபோதும் இந்த நீதிபதியின் செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படியுங்கள் : “உள்ளாடை அணியாததால் விமானத்தில் ஏற்ற மறுத்த அதிகாரிகள்” : கைகொடுத்த Boy Friend – பிரபஞ்ச அழகிக்கு ஏற்பட்ட பரிதாபம்

இருப்பினும், அந்த நீதிபதியின் கருத்து வேறுபாடு இருந்தபோதிலும், Bustos-க்கு மற்ற நீதிபதிகளின் முழு ஆயுள் தண்டனையை விதித்துள்ளது. அந்த தண்டனை காலத்தை அதை அவர் கடந்த வாரம் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த பேணி நீதிபதியிடம் கேட்டபோது “அந்த கைதியுடன் தனக்கு “உணர்ச்சி ரீதியான எந்த உறவும் இல்லை” என்றும், அவனது வழக்கைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதால் தான் அவனைப் பார்க்கச் சென்றதாகவும் சுரேஸ் மேலும் கூறினார். இப்போது, ​​சுபுட் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் “தகாத நடத்தை”-க்காக அந்த நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கைகளைத் எடுக்க ஆவணம் செய்து வருகின்றனர்.

ஒரு நீதிபதி இவ்வாறு நடந்துகொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts