Lottery Winning: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு நடந்த அதிசய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது கனவில் தோன்றிய லாட்டரி நம்பரை வாங்கியதில், அவர் ரூபாய் 40 லட்சம் பரிசை வென்றுள்ளார்.
பொதுவாக நாம் கனவில் காணும் எண்கள் எல்லாம் வெறும் கனவுகளாகவே இருக்கும். ஆனால், இந்த பெண்மணிக்கு அது உண்மையான அதிர்ஷ்டமாக மாறியுள்ளது. அவர் தனது கனவில் ஒரு குறிப்பிட்ட லாட்டரி எண்ணை தெளிவாகக் கண்டதாக கூறியுள்ளார். அந்த எண்ணை மறக்காமல் அடுத்த நாளே லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கிறார்.
லாட்டரி என்பது பலருக்கும் ஒரு கனவு உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு விளையாட்டு. குறைந்த முதலீட்டில் பெரிய தொகையை வெல்லும் ஆசை, பலரையும் லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கத் தூண்டுகிறது. ஆனால், யதார்த்தத்தில் லாட்டரி என்பது ஒரு சூதாட்டம் என்பதை மறந்துவிடக் கூடாது. லாட்டரியில் வெல்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. பெரும்பாலானவர்கள் தங்களது பணத்தை இழக்க நேரிடும். லாட்டரி வென்றவர்களின் கதைகள் நம்மை கவர்ந்தாலும், லாட்டரியில் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். லாட்டரி வென்றவர்களின் கதைகள் பெரிதாக செய்திகளில் வெளியாகும் போது, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணத்தை இழந்திருப்பார்கள்.
மெரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிக் 5 லாட்டரி குலுக்கலில் 50,000 டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம்) வென்றுள்ளார். மிகவும் வித்தியாசமாக, அவர் வென்ற எண்கள் அவரது கனவில் தோன்றியதாக கூறுகிறார்.
ப்ரின்ஸ் ஜார்ஜ் கவுண்டியைச் சேர்ந்த இந்த பெண், டிசம்பர் மாதம் தனது கனவில் ஒரு தொடர் எண்கள் தோன்றினதாகவும், அந்த எண்கள் விழித்த பிறகும் தனது மனதில் நீங்காமல் இருந்ததாகவும் மெரிலாந்து லாட்டரி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பெண், 9-9-0-0-0 என்ற எண்களைப் பயன்படுத்தி, ஆக்ஸன் ஹில்லில் உள்ள ஸிப் இன் மார்ட்டில் பிக் 5 லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவர் வாங்கிய டிக்கெட்டில் அந்த எண்கள் ஒத்துப்போய், அவருக்கு 50,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.40 லட்சம்) பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து அவரது கணவர் கூறுகையில், “எனது மனைவி முதலில் டிக்கெட்டை காட்டும் போது நம்பவில்லை. மிடாஸ் டச் என்று சொல்வார்களே அதுபோல தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது” என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இந்த பெண்மணியின் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. நம் வாழ்வில் நிகழும் சிறிய சம்பவங்களை கூட கவனித்து, அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.