TamilSaaga

TOTO லாட்டரி: அடுத்த குலுக்கல் தமிழ் புத்தாண்டு அன்று! எங்கு வாங்கலாம்?

TOTO என்பது சிங்கப்பூரில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் லாட்டரியாகும். பல பெயர்களில் லாட்டரிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரில் உள்ள ஒரே சட்டப்பூர்வமான ஆப்பரேட்டரான சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools)மூலம் நடத்தப்படுகிறது.

TOTOவில் மொத்தம் எத்தனை வகை பரிசு உள்ளது தெரியுமா?

சிங்கப்பூர் TOTOவில் மொத்தம் 7 வகையான பரிசுகள் உள்ளன. இவை பின்வருமாறு:

குரூப் 1 பரிசு (Group 1 Prize): 6 வெற்றி எண்களையும் சரியாகப் பொருத்தினால்.
குரூப் 2 பரிசு (Group 2 Prize): 5 வெற்றி எண்கள் + கூடுதல் எண்ணை (Additional Number) பொருத்தினால்.
குரூப் 3 பரிசு (Group 3 Prize): 5 வெற்றி எண்களைப் பொருத்தினால்.
குரூப் 4 பரிசு (Group 4 Prize): 4 வெற்றி எண்கள் + கூடுதல் எண்ணைப் பொருத்தினால்.
குரூப் 5 பரிசு (Group 5 Prize): 4 வெற்றி எண்களைப் பொருத்தினால்.
குரூப் 6 பரிசு (Group 6 Prize): 3 வெற்றி எண்கள் + கூடுதல் எண்ணைப் பொருத்தினால்.
குரூப் 7 பரிசு (Group 7 Prize): 3 வெற்றி எண்களைப் பொருத்தினால்.

இந்த பரிசு வகைகள் ஒவ்வொரு டிராவின் பரிசுத் தொகையைப் பொறுத்து மாறுபடும், மேலும் பரிசுத் தொகை வெற்றியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரிக்கப்படுகிறது. TOTO பற்றிய மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் பூல்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் இந்த வாரத்தின் முதல் குலுக்கல் நேற்று (10-04-2025) நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு இதற்கான குலுக்கல் நடைபெற்றது.

இதில், Group 1 எனப்படும் முதல் பரிசாக SGD $1,269,186 சிங்கப்பூர் டாலர் அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்திய மதிப்பில் எட்டு கோடிக்கும் மேல். எனினும், இந்த பரிசு யாருக்கும் கிடைக்கவில்லை.

அதேசமயம் Group 2 எனப்படும் இரண்டாவது பரிசான SGD $89,066 டாலர்கள் தொகையை 3 பேர் வென்றுள்ளனர். குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

Winning Numbers:

14 26 27 30 46 48

Group 2 winning tickets sold at:

  • Singapore Pools Toa Payoh Lorong 1 Branch – Block 111 Toa Payoh Lorong 1 #01-354 ( 1 QuickPick System 7 Entry )
  • Cold Storage Compass One – 1 Sengkang Square #B1-25 Compass One ( 1 QuickPick Ordinary Entry )
  • Singapore Pools Account Betting Service – – ( 1 QuickPick Ordinary Entry )

இதையடுத்து, இந்த மாதத்திற்கான இரண்டாவது குலுக்கல் வரும் ஏப்ரல் 14, 2025 தேதி – தமிழ் புத்தாண்டு அன்று  நடைபெறுகிறது. இதில், முதல் பரிசாக, $2,500,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

2025 Toto Hong Bao லாட்டரி குலுக்கல்….மெகா பரிசுத் தொகை அறிவிப்பு….கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு!

எந்த ஒரு சாதாரண மனிதரும் TOTO-வில் வெல்லலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். TOTO சீட்டுகளை வாங்குவதற்கு பல வசதியான விருப்பங்கள் உள்ளன. நீங்கள் கடையில் நேரடியாக வாங்கலாம் அல்லது வீட்டிலிருந்தே ஆன்லைனில் வாங்கலாம்.

www.singaporepools.com.sg என்ற இணையதளத்தின் மூலம் இந்த லாட்டரியை பெற முடியும்

TOTO விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாகும். இதன் போது பண இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, பொறுப்புடன் விளையாடுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts