TamilSaaga

வெளிநாட்டில் வேலைபார்த்த கணவர் : “அண்ணியோடு கொழுந்தனுக்கு ஏற்பட்ட காதல்” – ஏற்காட்டில் ஏற்பட்ட விபரீதம்

கள்ளகாதலால் குடும்பங்கள் சிதைந்து போகும் ஒரு அவலம் தற்போது தொடர்கதையாகியுள்ளது என்றே கூறலாம். இந்தியாவில் சின்னசேலம் என்ற பகுதி அருகே உள்ள ஊரை சேர்ந்தவர் தான் பிரபு. குடும்பத்திற்காக உழைக்க கடந்த 2017ம் ஆண்டே வெளிநாட்டுக்கு வேளைக்கு சென்றுள்ளார் பிரபு. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். வெளிநாட்டில் வேலைபார்த்து வரும் பிரபுவிற்கு ஜெயராம், மதன் மற்றும் விஜய் என்ற சகோதரர்கள் உண்டு. அவர்களுடன் கூட்டுக்குடும்பமாகத் தான் வாழ்ந்துள்ளார் பிரபு.

இதையும் படியுங்கள் : “மண்ணில் புரண்டது ஒரு குத்தமா?” : சிங்கப்பூர் Pandan பகுதியில் நீர்நாய்களை விரட்டி விரட்டி கொத்திய காகங்கள் – வைரலாகும் Video

இந்த நேரத்தில் தான் பிரபுவின் சகோதரர் விஜய்க்கும் பிரபுவின் மனைவி மஞ்சுவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக வளர்ந்த இந்த காதல் அடிக்கடி அவர்கள் இருவரும் வெளியூர் சென்று தங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த சூழலில் தான் பெருந்தொற்று காரணமாக சொந்த ஊர் திரும்பியுள்ளார் பிரபு. அதன் பிறகு கச்சராப்பாளையம் என்ற ஊருக்கு மனைவி மக்களுடன் தனிக்குடித்தனம் சென்று விவசாயம் செய்ய துவங்கியுள்ளார்.

ஆனால் இந்த நேரத்திலும் அவர்களுடைய கள்ளக்காதல் தொடர்ந்த நிலையில் விஜய்க்கு திருமன ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதனை அறிந்த மஞ்சு, விஜயை அழைத்துக்கொண்டு ஏற்காடு சென்று அங்கு ஒரு தனி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று விஜய் மதுபோதையில் இருந்ததாகவும் தனது அண்ணியிடம் தனக்கு விரைவில் நிச்சியதார்தம் நடக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். மதுபோதையில் இருந்த விஜய் உறங்கிவிட சுமார் 3 மணியளவில் எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த தனது அண்ணியை காணவில்லை. ஆனால் கழிவறையில் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டதால் அண்ணி கழிவறையில் இருக்கின்றார் என்று எண்ணி மீண்டும் உறங்கமுற்பட்டுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் மஞ்சு வெளியில் வராத காரணத்தால் பயந்துபோன அவர் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்றபோது அரை நிர்வாணமாக மஞ்சு தூக்கில் தொங்கிய கட்சியை கண்டு அதிர்ந்துள்ளார். உடனைடியாக அவரை தூக்கிவந்து ஆடைகளை மாட்டிவிட்டு முகத்தில் தண்ணீர் தெளித்தும் மஞ்சு எழுந்திருக்காத நிலையில் அதிர்ச்சியில் உறைந்தார் விஜய். உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “இனி ஈஸியா சிங்கப்பூரில் இருந்து திருப்பதி செல்லலாம்” : திருச்சி மார்கமாக சேவையை அளிக்கும் Indigo – என்று முதல் தெரியுமா?

சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சபாபதி இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts