கணவனின் வெற்றியை மனைவி கொண்டாடுவது என்பது இயல்பான ஒன்றுதான், அதுபோலத்தான் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண், தேர்தலில் வெற்றி பெற்று வீடு திரும்பிய கணவனுக்கு வேற மாதிரியான வரவேற்பை கொடுத்து அசத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தை சேர்ந்த பேரூராட்சி தான் பழனிசெட்டிபட்டி. இங்கு நடந்த பேரூராட்சி தேர்தலில் 7 இடங்களை திமுகவும், 6 இடங்களை அமமுக கட்சியும் 2 இடங்களை அதிமுகவும் பெற்றது.
இந்த பழனிசெட்டிபட்டி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஒருவர் மற்றும் இரண்டு அதிமுக வேட்பாளர்கள் இணைந்து ஆதரவு அளித்ததில் அமமுக கட்சி, தலைவர் பதவியை பெற்றது. பழனிசெட்டிபட்டியில் அமமுக கட்சியை எதிர்த்து போட்டியிட்ட திமுக பவானி தோல்வியடைந்தார்.
இதனையடுத்து அமமுக கட்சி தலைவர் பதவியை பெற அவருக்கு உதவிய திமுக பிரமுகர் மணிமாறனுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த செய்தி கேட்டு அவரை விட அவரது மனைவி ஆனந்தத்தில் மூழ்க, மணிமாறன் வீட்டுக்கு வந்ததும், சாலையில் வைத்து அனைவர் முன்னும் அலேக்காக மணிமாறனை தூக்கி மகிழ்ந்தார் அவரது மனைவி. “ஊர் காணே உங்க மேலதான் இருக்கும்” என்று கூறி ஆரத்தி எடுத்து அவரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார் அவர்.