சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாததை கண்டித்து அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த போராட்டம் டிவிட்டரில் திமுக சொன்னீங்களே செஞ்சீங்களா என்ற ஹேஷ்டாக்கில் இன்று காலை முதலே டிரெண்ட் ஆனது.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக.,வினர் அவர்களின் வீட்டு வாசலில் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதுபோல் சென்னையிலும் சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், எரிபொருள் விலை குறைப்பு, கல்விக்கடன் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் அதிமுகவினர் கேள்விகளை எழுப்பினர்.
இதுதொடர்பாக தேனியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், எங்களது போராட்டம் திமுகவின் வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதற்கே என்று குறிப்பிட்டார்.
அதிமுக.,வின் ஆர்ப்பாட்டம் இன்று காலை முதலே டிவிட்டரில் டிரெண்ட் ஆனது. திமுக_சொன்னீங்களே செஞ்சீங்களா என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் ட்ரெண்டாகி அதில் பலரும் பல்வேறு விமர்சனங்கலை கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.