TamilSaaga

யாருடைய உதவியும் இல்லாமல் உங்கள் Resume -ஐ நீங்களே சூப்பரா ரெடி பண்ணலாம்! Chatgpt-ல இப்படி try பண்ணிருக்கீங்களா?

வேலை தேடுவதை விட ஒரு வேலைக்கு Resume தயார் செய்வது தான் பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கக் கூடிய விஷயம். பட்டப்படிப்பு முடித்தவர்களும் கூட திணறக் கூறிய விஷயம் இது. படித்தவர்களுக்கே இந்த பாடு என்றால் அதிகம் படிக்காமல், வெளிநாடுகளில் உள்ள பெரிய கம்பெனிகளுக்கு Resume தயார் செய்து அனுப்புவது என்றால் கேட்கவா வேண்டும்? ஆனால் இனி எந்த கஷ்டமும் படாமல், யாருடைய உதவியும் இல்லாமலே Chatgpt மூலம் நீங்களே உங்களின் Resume ஐ தயார் செய்து அனுப்பி விடலாம். Chatgpt ல் Resume எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன் Chatgpt என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

Chatgpt என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு (AI)தொழில்நுட்பம் ஆகும். இதனால் மனிதர்கள் பேசும் மொழியை புரிந்து கொண்டு, அதே மொழியில் அதற்குரிய பதிலை அளிக்க முடியும். இந்த அல்காரிதம் நியூரல் நெட்வொர்க்கின் அடிப்படையில் இயங்குகிறது. இது ஒரு வகையான கணினி ப்ரொகிராம் தான் என்றாலும், அது மனித மூளை வேலை செய்வதை ஒட்டி வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டிரான்ஸ்ஃபார்மர் அல்காரிதத்தால் தரவுகள், வரி வடிவங்கள் போன்றவைகளை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள முடியும். அதைப் பயன்படுத்தி மனிதர்கள் பேசுவதைப் போன்ற உரையாடல்களை ஜி பி டி உருவாக்கும்.

Chatgpt மூலம் Resume தயாரிக்கும் முறை :

  • www.chatgpt.com என்ற இணையதளத்திற்கு சென்று, கீழே உள்ள chat box ல், “Build a resume for me in latex using an appropriate templet” என டைப் செய்யுங்கள்.
  • அதற்கு கீழ் கொஞ்சம் space விட்டு, உங்களின் பெயர், எத்தனை ஆண்டுகள் அனுபவம், எந்த துறையில் அனுபவம் என்பதை டைப் செய்யுங்கள்.
  • அதற்கு கீழ் உங்களின் இமெயில், மொபைல் எண், முகவரி, உங்களின் தனித் திறமைகள் உள்ளிட்ட உங்களை பற்றிய சுய விபரங்களை வரிசையாக டைப் செய்து enter கொடுத்து விடுங்கள்.
  • இப்போது நீண்ட code ஒன்று உங்களுக்கு வரும். அதை அப்படியே copy செய்து கொள்ளுங்கள்.
  • மற்றொரு tabல் www.overleaf.com என டைப் செய்து, அந்த இணையதளத்திற்குள் செல்லுங்கள்.
  • அதில் முதலில் new project என்பதையும், பிறகு blank project என்பதையும் கிளிக் செய்யுங்கள்.
  • இப்போது box ஒன்று காட்டும். அதில் ஏதாவது டைப் செய்து enter அடித்தால், முழுவதுமாக காலியாக இருக்கும் வெள்ளை காகிதம் போன்ற பக்கம் வரும்.
  • இந்த பக்கத்தில் ஏற்கனவே நீங்கள் copy செய்து வைத்த code ஐ paste செய்து, அருகில் இருக்கும் recompile என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் ஒரு சில நொடிகளிலேயே சூப்பராக உங்களின் Resume ரெடியாகி விடும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பின்பற்றி யாருடைய உதவியும் இல்லாமல், ஒரு சில நிமிடங்களிலேயே உங்களின் Resume ஐ சூப்பராக ரெடி செய்து விடலாம். இதை நீங்களும் try பண்ணி பாருங்க.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts