சமீபத்தில் ரஷ்ய வீராங்கனை ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற அல்லா சிஷ்கினா அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்துள்ளது. அதீத பலத்துக்கு உடலுறவு உதவுவதாக அவர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்பிரஸ் மீடியாவுக்கு பேட்டி ஒன்றை அளித்த அவர், தான் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பதாகவும், அவருடைய மருத்துவரான டெனிசிடம் லந்தாலோசித்த பொது அறிந்த கருத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
“அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நீண்ட நேர வேலை இருந்தால் தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தால், அப்போது உடலுறவு தேவைப்படாது. இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.” என்ற ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம் எனவும் உடலுறவு கொள்வதன் மூலமாக அதற்கான பலன் கிடைக்கும் எனும் பட்சத்தில் அதனை அவர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடலுறவானது மிக முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் என்றும், இதனால் அவர்களின் தேவையற்ற ஆக்ரோஷம் கட்டுக்குள் இருக்கும் மேலும் டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் செயல்திறன் அதிகமாகும் எனவும் அவர் பகிர்ந்துள்ளார்.