TamilSaaga

வயசு 70க்கும் மேல.. அதனால என்ன?.. கோடி கணக்குல சொத்து இருக்குல… வயதான 7 பில்லியனர்களை திருமணம் செய்த அழகான இளம் பெண்கள்!

கோடிக்கணக்கில் பணம் இருந்தால், வயதான காலத்திலும் அழகான பெண்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ முடியும் என்று உலகின் சில பணக்காரர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வயதான 7 பில்லியனியர்களைப் பற்றியும் அவர்களது ஜோடிகள் பற்றியும்தான் நாம பார்க்கப்போறோம்.

வயதான பில்லினியர்கள்

காதலுக்கு வயது என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. உலக அளவில் வியாபாரம் தொடங்கி அன்றாட வாழ்வு வரை சக்ஸஸ்ஃபுல்லாக இருக்கும் பணக்காரர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும், ஒரு பெண் இருப்பார். அப்படி, உலகில் சக்ஸஸ்ஃபுல்லான சில பில்லினியர்களுக்குப் பின்னால் இருக்கும் அவர்களின் மனைவிகளைப் பற்றிதான் நாம இப்போ பார்க்கப்போறோம்.

மொனாக்கோ இளவரசி

மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் உலகின் பணக்காரர்களில் முக்கியமானவர். ஆடம்பரமான பங்களா, பகட்டான வாழ்வு என வாழ்பவர். இவரது மனைவியும் இளவரசியுமான சார்லீனை இவர் சந்தித்த நிகழ்வு சுவாரஸ்யமானது. சார்லீனின் இயற்பெயர் ‘Charlene Lynette Wittstock’. ஜிம்பாப்வேயில் ‘Rhodesia’-வில் பிறந்து வளர்ந்த இவரது குடும்பம் தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. அந்த நாட்டுக்காக சர்வதேச நீச்சல் போட்டிகளில் சார்லீன் பங்கேற்றார். 2000-ம் ஆண்டு நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் சார்லீனை, ஆல்பர்ட் முதல்முறையாகச் சந்தித்திருக்கிறார். அதன்பின்னர், 2006-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் இருவரும் நேரில் சந்தித்திருக்கிறார்கள். இருவரும் காதல் வயப்படவே, சார்லீன் சர்வதேச நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு 2011-ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2014-ல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.

மேலும் படிக்க – “தோனி முதல் சிவகார்த்திகேயன் வரை” அணியும் ‘Balmain’ பிராண்ட் டிரஸ்… அப்படி என்னதான் இந்த டிரஸ்-ல இருக்கு? சிங்கப்பூரில் தலைசுற்ற வைக்கும் விலை!

’Wendi Deng’

’Wendi Deng’ சீனாவில் பிறந்தவர். தனது இளம் வயதிலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த அவர், யேல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். அமெரிக்காவின் மிகப்பெரிய மீடியா ஓனரான ராபர்ட் முர்டாக்கை 1997-ம் ஆண்டு முதல்முறையாக சந்தித்தார். பின்னர் இருவரும் 1999 ஜூனிலும் நேரில் சந்தித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவர் இடையே நெருக்கமாகவே, தனது இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்த 14 நாட்களில் இவரை 68 வயதான முர்டாக் திருமணம் செய்துகொண்டார். 2000 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர் ராபர்ட் முர்டாக். சீன உளவாளியாகக் கருதப்பட்ட ’Wendi Deng’, முர்டாக்கை 45 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான தொகையை சீனாவில் முதலீடு செய்ய வைத்தார். கிட்டத்த 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. தனது மனைவி தன்னிடம் உண்மையாக இல்லை என்று முர்டாக் கருதினார்.

’Fabiana Flosi’

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பவர் ‘Bernie Ecclestone’. பிரேசில் கிராண்ட் பிரிக்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய Fabiana Flosi-க்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 300 கோடி டாலருக்கும் மேலான சொத்துகளைக் கொண்டிருக்கும் பெர்னி, தன்னை விட 45 வயது இளையவரான ஃப்ளோசியைக் கடந்த 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவரின் மூன்றாவது மனைவி இவராவார். அதேபோல், ஃப்ளோசியும் பெர்னிக்கு முன்னர் வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவரை விவாகரத்து செய்தபிறகு, டாக்டர் ஒருவருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகச் சொல்கிறார்கள். காதலுக்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழும் இந்த ஜோடி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்கிறார்கள்.

’Melanie Craft Ellison’

அமெரிக்க எழுத்தாளரும் நாவலாசிரியருமான ’Melanie Craft Ellison’ தனக்கென பேரும் புகழும் சம்பாதித்துக் கொண்டவர். அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களுள் ஒன்றான ஆரக்கிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ‘Larry Ellison’ உடன் இவருக்குக் காதல் ஏற்பட்டது. பெரும் கோடீஸ்வரரான எல்லீசன், தன்னை விட 25 வயது மூத்தவராக இருந்தாலும் பரவாயில்லை என்று அவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் திருமணத்துக்கு அதிகாரப்பூர்வ போட்டோகிராஃபராக இருந்த மறைந்த ஆப்பிள் நிறுவன நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லீசனின் நான்காவது திருமணமான இது, 2014-ல் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்தின் ஒருபகுதியாக மெலைன், கார்கள், பண்ணை வீடுகள், ஆடம்பர கப்பல்கள் என பல பொருட்களை ஜீவனாம்சமாகப் பெற்றார்.

’Andrea Wynn’

இங்கிலாந்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ’Andrea Wynn’, கடந்த 2008-ல் அமெரிக்காவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ‘Steve Wynn’-ஐ முதல்முறையாக சந்தித்தார். அப்போது, தனது முதல் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த ஸ்டீவ், தன்னை விட 21 வயது இளையவரான ஆண்ட்ரியாவுடன் காதலில் விழுந்தார். ஆனால், அப்போது அவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறவில்லை. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய விவகாரத்தாகப் பார்க்கப்பட்ட அந்த விவாகரத்தின்போது, தனது மனைவிக்கு 741 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குசந்தை பங்குகளை ஸ்டீவ் கொடுத்தார். அதன்பிறகு, ஆண்ட்ரியாவை ஆடம்பரமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் மணமகனின் தோழராக இருந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகரான கிளிண்ட் ஈஸ்ட்வுட். இந்தத் திருமணத்துக்கு மட்டுமே ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் பட்ஜெட் போடப்பட்டது.

மேலும் படிக்க – தகதகவென எரிந்த இரண்டாம் உலகப்போர்.. நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய சிங்கப்பூர் “ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்” – மிரண்டு போய் பின்வாங்கிய ஜப்பான்

’Hope Dworaczyk’

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண அழகியாக 2000-ல் முடிசூடப்பட்டவர் ’Hope Dworaczyk’. அதன்பிறகு, மாடலிங் வாய்ப்புத் தேடி நியூயார்க் நகருக்குக் குடிபெயர்ந்தார். புகழ்பெற்ற பிளேபாய் இதழின் ‘Playmate’ ஆக 2009 ஏப்ரலில் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், அந்த இதழின் முதல் ‘3D folding’ மாடல் என்ற பெருமையையும் பெற்றவர். இவர், 2015-ல் தனது நீண்டகால ஃபாய்பிரண்டும் டெக் முதலீட்டாளருமான ராபர்ட் ஸ்மித்தைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிக ஆடம்பரமாக நடந்தேறியது. விஸ்டா பாட்னர்ஸ் நிறுவன தலைமை செயலதிகாரியான ராபர்ட் ஸ்மித், அமெரிக்க பணக்காரர்களுள் ஒருவர். இந்த தம்பதிக்குத் தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

‘James Goldstein’

நம்ம செய்தியோட கவர் போட்டோவில் இடம்பெற்றிருக்கும் 82 வயது பிளேபாய்தான் ‘James Goldstein’. மேலே நாம் பட்டியலிட்டிருக்கும் கோடீஸ்வரர்கள் போல், இவர் எவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியான லேக்கர்ஸ் டீமின் வெறித்தனமான ரசிகர் இவர். கிட்டத்தட்ட 1961-ம் ஆண்டு முதலே அந்த அணியுடன் பயணித்து வரும் இந்த கோடீஸ்வரர், ஒவ்வொரு காலத்திலும் டாப் மாடல்களுடன் ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்பைப் பராமரித்து வருவார். அப்படியான சூப்பர் மாடல்களோடு இவரை அவ்வப்போது அமெரிக்காவின் ‘NBA’ போட்டிகளில் பார்க்க முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts