Kadai Elu Vallalgal : தமிழ் படித்த அனைவருக்குமே இந்த தலைப்பை தாண்டாமல் வந்திருக்கவே முடியாது. கடையேழு வள்ளல்கள். இவர்கள் பற்றி பலருக்கு பெரிய அளவில் தெரிந்தாலும், சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு வள்ளல்கள் குறித்து மட்டுமே தெரிந்திருக்கும். யார் இந்த வள்ளல்கள்? ஏன் இவர்களை கடையேழு வள்ளல்கள் எனக் கூறுகின்றனர். இதையெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.
கடையேழு வள்ளல்கள்:
சங்க கால இலக்கியமான பத்துபாட்டில் இருக்கும் இலக்கியமான பத்துபாட்டில் இருக்கும் மூன்றாம் பாடல் தான் சிறுபாணாற்றுப்படை. நல்லூர் நத்தத்தனார் இந்த சிறுபாணாற்றுப்படையை பாடினார். அந்த பாடலில், கடையேழு வள்ளல்கள் பற்றியும், அவர்கள் செய்த மிகப்பெரிய கொடைகள் பற்றியும் பாடியுள்ளார். வள்ளல்களின் கொடைகள் தான் அவர்களின் அடையாளமாக நம் மனதில் பல நூறாயிரம் ஆண்டுகள் கடந்து தங்கி இருக்கிறது. மேலும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களில் இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை இடம் பெற்றுள்ளன.
கடையேழு வள்ளல்கள் யார் யார்?
பேகன் |
பாரி |
காரி |
ஆய் |
அதியமான் |
நள்ளி |
ஓரி |
பேகன்:
கடையேழு வள்ளல்களில் முதலாவது வள்ளலாக அழைக்கப்படுபவர் பேகன். இவர் பொதினி மலைக்குத் தலைவர் என்ற சிறப்பினை பெற்று இருந்தார். இன்றைய நாளில் அந்த இடம் சிறப்புமிக்க பழனி மலை என்று அழைக்கப்படுகிறது. பழனி மலையில் எப்போதுமே மழை வளம் அதிகமாக இருக்கும். மேலும், மலையின் காட்டில் அழகான மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். இந்நிலையில், அந்த மலையில் ஒருநாள் பேகன் வலம் வந்து கொண்டு இருந்தார். அப்படித் திரிந்து கொண்டிருந்த சமயம் மயில் அகவியதைக் கேட்டு, குளிரால் அது நடுங்கியதை அறிந்தார். அதன் அகவலை கேட்ட பேகன் மயிலுக்கு குளிரில் இருந்து காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை போர்த்தினார். தன்னுடைய போர்வை மயிலுக்கு போர்த்த ஒரு நொடிக்கூட யோசிக்காமல் இந்த செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சங்க இலக்கியம் போற்றுகின்றது.
பாரி:
சங்க இலக்கியத்தின் இரண்டாவது வள்ளல் பாரி. இவர் பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். பாரியை பலருக்கு வேள்பாரி என்று கூறினால் எளிதாக தெரிந்துவிடும். ஒருமுறை பாரி சென்ற வழியில், தேரைத் தடுத்தது ஒரு முல்லைக் கொடி. அதை எடுத்துப்போட விரும்பாத பாரி, அது படர்வதற்குத் தன்னுடைய பெரிய தேரையே அளித்துவிட்டு இறங்கியவர்.
காரி:
மலாட்டை ஆட்சி புரிந்த வந்தவர் காரி. திருக்கோயிலூர் மேற்கே இருக்கும் தென்பெண்ணை ஆற்றின் தென்கரை அடங்கிய பகுதியை தான் “மலாடு” என்கிறார்கள். இவரை மலையமான் திருமுடிக் காரி என்று அழைத்தும், மலையமான் மற்றும் கோவற் கோமான் எனவும் அழைக்கப்பட்டு வந்தார்.
காரியிடம் யாரும் தானம் கேட்டு வரும்போது எப்போதும் அருள் நிறைந்த சொற்களை மட்டுமே பேசும் குணம் கொண்டவர். இவரின் தன்னுடைய தலையில் தலையாட்டம் என்ற அணிகலனை அணிந்து இருப்பார். கழுத்தில் ஒலிக்கும் மணியை அணிந்து இருப்பார். அந்த அணிகலனை கூட கேட்டவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் கொடுத்த வள்ளல் தான் காரி. புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் காரியைப் போற்றிப் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்று இருக்கிறது.
ஆய்:
கடையேழு வள்ளல்களில் முக்கியமானவர் ஆய். இவருக்கு நீல நிறமுள்ள நச்சரவம் இவருக்கு ஒளி பொருந்திய ஓர் அரிய ஆடையை அளித்தது. அந்த நாகம் கொடுத்த அந்த ஆடையை கூட ஆலமரத்தின் கீழிருந்த சிவபெருமானுக்கே கொடையாக அளித்த வள்ளல் இவர்.
அதியமான்:
அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான், அஞ்சி என பல முக்கிய சிறப்பு பெயர்களை பெற்ற வள்ளல் தான் அதியமான். இவரை தெரியாத தமிழ் மக்களே கிடையாது. தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த குறுநில மன்னர். தன்னைய நாட்டு மலையில் ஒன்றின் உச்சியில் இருந்த மரத்தில் நெல்லி மரத்தின் சிறப்பு மிக்க கனி ஒன்று இருந்தது. அதை உண்டால் உண்பவர்களுக்கு நரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் சிறப்பு கொண்டது. அதை தான் உண்டு நிறைய நாள் வாழ ஆசைப்படவில்லை அவர். தம்மைக் காண வந்த ஒளவையார்க்கு கொடையாக கொடுத்து புகழில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றவர்.
நள்ளி:
அதிக மலைகள் கொண்ட கண்டீர நாட்டினை ஆண்ட மன்னர். நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் இவருக்கு நிறைய பெயர்கள் இன்னமும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. கொடை கேட்டு வந்தவர்களுக்கு நள்ளி வாயில் இருந்து எப்போதுமே இல்லை என்று வந்து இல்லை. வன்பரணர் நள்ளியைப் பற்றிப் பாராட்டி பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காண முடியும்.
ஓரி:
கடையேழு வள்ளல்களில் கடைசி வள்ளல். வில் போரில் வல்லவர். இவரை வல்வில் ஓரி என்றும் அழைப்பர். கொல்லிமலையில் இருந்த கலைஞர்களுக்கு தனது நாட்டையே பரிசாக கொடுத்த வள்ளல் தான் ஓரி.