ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரின் யிப் பின் சியு தனது 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் எஸ் 2 போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் இன்று மாலை சிங்கப்பூர் நேரப்படி 4.40 மணிக்கு நடந்த 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் எஸ் 2 போட்டிகளில் 2:16.60 என்ற நேர அளவில் பந்தய தூரத்தை கடந்து தங்கத்தை தட்டிச்சென்றுள்ளார் நமது சிங்கப்பூர் சிங்கப்பெண் யிப் பின் சியு.
அடுத்தபடியாக செப்டம்பர் 2ம் தேதி நடக்கவிருக்கும் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் S2 போட்டிகளில் அவர் பங்குபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யிப் பின் சியு அவரது நான்காவது பாராலிம்பிக் போட்டியில், இரட்டை உலக சாம்பியன் யிப் 14.46 நேரத்தில் தனது இலக்கை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே யிப் மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 50 மீ பேக்ஸ்ட்ரோக் எஸ் 2 மற்றும் 100 மீ பேக்ஸ்ட்ரோக் எஸ் 2 போட்டிகளில் உலக சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கம் வென்ற ஒரே வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 2008ல் பெய்ஜிங் பாராலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் யிப் பின் சியு விருது பெற்றுள்ளார்.