சிங்கப்பிரில் உணவு முத்திரையை தவறாக குத்திய நிறுவனம் மீது எழுந்த கண்டனத்திற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “ஜயன்ட்” நிறுவனம் இறைச்சிக்கான ஹலால் கோழியின் மீது ஆஸ்திரேலிய பன்றித் தோல் என தவறாக முத்திரையை பதிவு இட்டுள்ளது.
இதனை எதிர்த்து இணையத்தில் ஒரு இஸ்லாமியர் கண்டனங்களையும் ஜயன்ட் கிளையில் நடந்த சம்பவத்தையும் பதிவிட்டிருந்தார்.
இப்படி நடப்பது இது முதல்முறை அல்ல. ஏர்கமவே என் டி யுசி ஃபேர்பிரைஸ் கடையில் ஒதே போல கோழியின் மீது பன்றி என தவறாக முத்திரையிடப்பட்டது.
அதன் கிளை இதற்கு மன்னிப்பு கேட்டது.
தற்போது ஜயன்ட் அங்காடியும் இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளது.