சிங்கப்பூர் கால்பந்து போட்டியால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 10 முதல் 20 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிங்கப்பூரில் நடந்து வரும் 2022ம் ஆண்டு கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறது. இன்னும் Finals மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், மருத்துவர்கள் தங்களை சந்திக்க வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
சிங்கப்பூரில் இருக்கும் GPக்கள் மற்றும் மருத்துவர்கள், கால்பந்து பார்த்து விட்டு காலதாமதமாக தூங்குவதால் இந்த இரண்டு வாரங்களில் தங்களை சந்திக்கும் நோயாளிகள் 20 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள். இதில் நோயாளிகள் அதிகமாக தலைவலி மற்றுன் நெஞ்செரிச்சல் பிரச்னைக்காக வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது தாமதமாக தூங்குவது மற்றும் இரவில் அதிகமாக சாப்பிடுவது ஆகியவற்றின் பொதுவான அறிகுறியாகும்.
சிங்கப்பூரில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டிகளை நேரலையில் பார்க்கவும், கத்தாரில் நடக்கும் சமீபத்திய போட்டிகளைப் பார்க்கவும், விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள ரசிகர்கள் அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விழித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு தயாராகி விட்டீங்களா… வொர்க் பெர்மிட் வந்துட்டா? அப்போ உங்களிடம் இருக்கும் அந்த விசா உண்மையானதா? எப்படி செக் செய்யலாம்
சிங்கப்பூர் பாரம்பரிய சீன மருத்துவக் கல்லூரியின் குடியுரிமை மருத்துவர் ஒருவர் தெரிவிக்கும் போது, ஏற்கனவே சிங்கப்பூர் மக்கள் வேலை தொடர்பாக மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்கனவே பலர் நோயாளிகளாக தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் கால்பந்து போட்டியால் நோயாளிகளில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு ரத்த அழுத்தம், ஹைப்பர்லிபிடெமியா மற்றும் ஹைப்பர் கிளைசீமியா போன்ற அடிப்படை பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் தூக்கமின்மையை அனுபவித்தால், அவர்களின் அறிகுறிகள் மோசமாகிவிடும்.
உலகக் கோப்பை முடிவடையும் போது, மக்கள் கூடிய விரைவில் சாதாரண தூக்க பழக்கத்திற்கு திரும்புவது எந்தவொரு நீண்ட கால விளைவுகளையும் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். ஒரு இரவில் சரியாக தூங்கி எழுந்தாலே இந்த பிரச்னை சரியாகி விடும்.
மேலும், இரவு அதிக நேரம் முழித்து இருக்கும் போது நிறைய சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்னைகளை அதிகரிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் எளிதாக செரிமானம் ஆகக்கூடிய உணவினை சாப்பிடுங்கள். இரவில் காபி அல்லது மதுபானம் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.