சிங்கப்பூரில் தான் இருந்த 12வது மாடியின் ஜன்னலின் வழியே மின்னணு சாதனங்கள் மற்றும் பிற பொருட்களுடன் தூக்கி வெளியே எறிந்த 46 வயது சிங்கப்பூர் பெண்ணுக்கு நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) அன்று ஆறு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மஸ்லினா ராம்லீ என்ற அந்த பெண்மணி மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு மோசமான செயலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார்.
மஸ்லினா தனது கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரும் சிறையில் இருந்ததால், வீட்டில் தனியாக தனது நாட்களைக் கழித்ததில் வருத்தமும், மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது பிஷன் பிளாட் ஜன்னலில் இருந்து ஐந்து உலோக பொருட்கள், கணினி ஒன்றின் CPU, அந்த கணினியின் மானிட்டர் ஆகியவற்றை வெளியே தூக்கி எறிந்துள்ளார்.
அவர் தூக்கியெறிந்த பொருட்கள் தரை தளத்தில் இருந்த ஒரு புல்வெளி மற்றும் கான்கிரீட் நடைபாதையில் சத்தத்துடன் விழுந்துள்ளது. இந்த பொருட்கள் விழுந்த இடம் அப்பகுதி குடியிருப்பாளர்கள் பயன்படுத்தும் பாதை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையில் பொருட்கள் மோசமாக சேதமடைந்தாலும், மார்ச் 9ம் தேதி 2020 காலை நடந்த இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
இந்நிலையில் அந்த நேரத்தில், அருகில் இருந்த மூத்த செயல்பாட்டு மையத்தில் பணிபுரிந்த திருமதி செந்துஜா சுப்பிரமணியன் என்ற 28 வயது சமூக சேவகர், பலத்த சத்தமொன்றை கேட்டு திடுக்கிட்டு வெளியில் வந்து பார்த்தபோது கம்ப்யூட்டர் மற்றும் அதி சார்ந்த பொருட்கள் மேலிருந்து கீழே வந்து விழுவதை கண்டுள்ளார். மஸ்லினா தனது ஜன்னலிலிருந்து பொருட்களை வீசுவதை பார்த்துவிட்டு அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மஸ்லினா ராம்லீ ஏற்கனவே இதுபோன்ற செயல்களுக்காக கடந்த 2000 மற்றும் 2008ம் ஆண்டுகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.