சிங்கப்பூரின் சிராங்கூன் வட்டாரத்தில் உள்ள NEX கடைத்தொகுதிக்கு அருகே அமைந்திருக்கும் மேம்பாலம் ஒன்றின் கூரை மீது ஏறிய பெண் ஒருவர் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், குடிமைத் தற்காப்புப் படை வீரர் ஒருவர் மிகுந்த கவனத்துடன் மேம்பாலத்தின் கூரை மீது ஏறி, அந்தப் பெண்ணுக்குப் பின்னால் சென்று அவரைப் பத்திரமாக கீழே இறக்குவது பதிவாகியுள்ளது.
மீட்கப்பட்ட அந்தப் பெண் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பாதுகாப்பு கருதி, மேம்பாலத்திற்குக் கீழே இருந்த சாலைப்பகுதி தற்காலிகமாக போக்குவரத்திற்கு மூடப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையில் 12க்கும் மேற்பட்ட குடிமைத் தற்காப்புப் படை வீரர்கள் மற்றும் 2 குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக 8 World செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025-ல் சிங்கப்பூர் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு….எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 45 வயதுடைய அந்தப் பெண் மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.