TamilSaaga

சிங்கப்பூரில் கண்ணிமைக்கும் நொடியில் நடந்த “சம்பவம்”! (Video)

சிங்கப்பூரின் ஆர்கிட் பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பலருக்கும் ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது.

சிங்கப்பூரின் விஸ்மா அட்ரியாவுக்குப் பின்னால் உள்ள ஆர்கிட் டர்ன் பகுதியில், கடந்த மாதம் செப்.13 அன்று மதியம் சுமார் 3 மணியளவில், பெண் ஒருவர் காதில் ஹெட்செட் போட்டு கேஷுவலாக நடந்து வந்திருக்கிறார்.

அப்போது, அவர் சாலையின் இருபுறமும் கவனிக்காமல், எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல், பாடலைக் கேட்டுக் கொண்டே சாலையை கடக்க முயல, அப்போது பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
.
ஜஸ்ட் 1 மீட்டர் தூரத்தில் SMRT பஸ் வந்த போதுதான், அந்த பெண் தன்னருகில் பெரும் ஆபத்து வந்திருப்பதை உணர்ந்தார். நல்ல வேளையாக, பஸ் டிரைவர் உடனே பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தால், அந்தப் பெண் ரொம்பவே பயந்து போக, கையை தூக்கி மன்னிப்பு கேட்டு, வேகமா அங்கிருந்து ஓடிவிட்டார்.

மேலும் படிக்க: சிங்கப்பூர்-ல் குவிந்து வரும் வேலைவாய்ப்புகள்! உங்க துறையா-னு கொஞ்சம் செக் பண்ணுங்க!
.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்த்து நிறைய பேர் கமெண்ட் செய்துள்ளனர்.. அந்தப் பெண் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு பலர் சொல்ல, ஹெட்போன் போட்டுக்கிட்டு சாலையை கடந்து, தனக்கு மட்டுமின்றி, அந்த பேருந்தில் இருந்தவர்களுக்கும் பெரும் ஆபத்தை அந்த பெண் ஏற்படுத்தி விட்டதாகவும் பலர் காட்டமாக பதிவிட்டுள்ளனர்.

டென்னிஸ் என்கிற ஃபேஸ்புக் பயனர், “ஹெட்போன் இருந்தாலும் இல்லைன்னாலும், அந்தப் பெண் வர்ற வாகனங்களையே பார்த்திருக்கணும்” என்று சொல்லியிருக்கார்.
..
எட்வின் பாங் என்கிற நெட்டிசன், “தக்க நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பிரேக் அடித்த பஸ் கேப்டனுக்கு அந்த பஸ் கம்பெனி பாராட்டு தெரிவிக்கணும்!” என்று சொல்லியிருக்கார். சரிதானே!

Related posts